கம்பராமாயணத்தின் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பராமாயணம் என்பது கம்பரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் வால்மீகியின் வடமொழி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது.

இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.[1] இந்த ஆறு காண்டங்களில் 113 படலங்களும், 10,500 பாடல்களும் உள்ளன. [1]

  1. பாலகாண்டம்[1]
  2. அயோத்தியா காண்டம்[1]
  3. ஆரண்ய காண்டம்[1]
  4. கிட்கிந்தா காண்டம்[1]
  5. சுந்தர காண்டம்[1]
  6. யுத்த காண்டம்[1]

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்

பாலகாண்டம்[தொகு]

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

  • பாயிரம்
  1. ஆற்றுப் படலம்
  2. நாட்டுப் படலம்
  3. நகரப் படலம்
  4. அரசியற் படலம்
  5. திரு அவதாரப் படலம்
  6. கையடைப் படலம்
  7. தாடகை வதைப் படலம்
  8. வேள்விப் படலம்
  9. அகலிகைப் படலம்
  10. மிதிலைக் காட்சிப் படலம்
  11. கைக்கிளைப் படலம்
  12. வரலாற்றுப் படலம்
  13. கார்முகப் படலம்
  14. எழுச்சிப் படலம்
  15. சந்திரசயிலப் படலம்
  16. வரைக்காட்சிப் படலம்
  17. பூக்கொய் படலம்
  18. நீர் விளையாட்டுப் படலம்
  19. உண்டாட்டுப் படலம்
  20. எதிர்கொள் படலம்
  21. உலாவியற் படலம்
  22. கோலம்காண் படலம்
  23. கடிமணப் படலம்
  24. பரசுராமப் படலம்

அயோத்தியா காண்டம்[தொகு]

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

  1. மந்திரப் படலம்
  2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
  3. கைகேயி சூழ்ச்சிப் படலம்
  4. நகர் நீங்கு படலம்
  5. தைலம் ஆட்டு படலம்
  6. கங்கைப் படலம்
  7. குகப் படலம்
  8. வனம் புகு படலம்
  9. சித்திரகூடப் படலம்
  10. பள்ளிப்படைப் படலம்
  11. ஆறுசெல் படலம்
  12. கங்கை காண் படலம்
  13. திருவடி சூட்டு படலம்

ஆரணிய காண்டம்[தொகு]

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

  1. விராதன் வதைப் படலம்
  2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
  3. அகத்தியப் படலம்
  4. சடாயு காண் படலம்
  5. சூர்ப்பணகைப் படலம்
  6. கரன் வதைப் படலம்
  7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
  8. மாரீசன் வதைப் படலம்
  9. இராவணன் சூழ்ச்சிப் படலம்
  10. சடாயு உயிர் நீத்த படலம்
  11. அயோமுகிப் படலம்
  12. கவந்தன் படலம்
  13. சவரி பிறப்பு நீங்கு படலம்

கிட்கிந்தா காண்டம்[தொகு]

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடி அலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்றடைந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

  1. பம்பை வாவிப் படலம்
  2. அனுமப் படலம்
  3. நட்புக் கோட்படலம்
  4. மராமரப் படலம்
  5. துந்துபிப் படலம்
  6. கலன் காண் படலம்
  7. வாலி வதைப் படலம்
  8. தாரை புலம்புறு படலம்
  9. அரசியற் படலம்
  10. கார்காலப் படலம்
  11. கிட்கிந்தைப் படலம்
  12. தானை காண் படலம்
  13. நாட விட்ட படலம்
  14. பிலம் புக்கு நீங்கு படலம்
  15. ஆறு செல் படலம்
  16. சம்பாதிப் படலம்
  17. மயேந்திரப் படலம்

சுந்தர காண்டம்[தொகு]

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.அதன் பதினான்கு படலங்கள் பின்வருமாறு:

  1. கடல் தாவு படலம்
  2. ஊர் தேடு படலம்
  3. காட்சிப் படலம்
  4. உருக் காட்டு படலம்
  5. சூடாமணிப் படலம்
  6. பொழில் இறுத்த படலம்
  7. கிங்கரர் வதைப் படலம்
  8. சம்புமாலி வதைப் படலம்
  9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
  10. அக்ககுமாரன் வதைப் படலம்
  11. பாசப் படலம்
  12. பிணி வீட்டு படலம்
  13. இலங்கை எரியூட்டு படலம்
  14. திருவடி தொழுத படலம்

யுத்தகாண்டம்[தொகு]

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

  1. கடல் காண் படலம்
  2. இராவணன் மந்திரப் படலம்
  3. இரணியன் வதைப் படலம்
  4. வீடணன் அடைக்கலப் படலம்
  5. ஒன்னார் வலிஅறி படலம்
  6. கடல் சீறிய படலம்
  7. வருணன் அடைக்கலப் படலம்
  8. சேது பந்தனப் படலம்
  9. ஒற்றுக் கேள்விப் படலம்
  10. இலங்கைகாண் படலம்
  11. இராவணன் வானரத்தானை காண் படலம்
  12. மகுட பங்கப் படலம்
  13. அணிவகுப்புப் படலம்
  14. அங்கதன் தூதுப் படலம்
  15. முதற் போர் புரி படலம்
  16. கும்பகருணன் வதைப் படலம்
  17. மாயா சனகப் படலம்
  18. அதிகாயன் வதைப் படலம்
  19. நாகபாசப் படலம்
  20. படைத் தலைவர் வதைப் படலம்
  21. மகரக்கண்ணன் வதைப் படலம்
  22. பிரமாத்திரப் படலம்
  23. சீதை களம்காண் படலம்
  24. மருத்துமலைப் படலம்
  25. களியாட்டுப் படலம்
  26. மாயா சீதைப் படலம்
  27. நிகும்பலை யாகப் படலம்
  28. இந்திரசித்து வதைப் படலம்
  29. இராவணன் சோகப் படலம்
  30. படைக் காட்சிப் படலம்
  31. மூலபல வதைப் படலம்
  32. வேல் ஏற்ற படலம்
  33. வானரர் களம் காண் படலம்
  34. இராவணன் களம் காண் படலம்
  35. இராவணன் தேர் ஏறு படலம்
  36. இராமன் தேர் ஏறு படலம்
  37. இராவணன் வதைப் படலம்
  38. மண்டோதரி புலம்புறு படலம்
  39. வீடணன் முடி சூட்டு படலம்
  40. பிராட்டி திருவடி தொழுத படலம்
  41. மீட்சிப் படலம்
  42. திருமுடி சூட்டு படலம்
  43. விடை கொடுத்த படலம்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Untitled Document".

வெளி இணைப்புகள்[தொகு]

கம்பராமாயணம் - தமிழாய்வு