உள்ளடக்கத்துக்குச் செல்

கமெல்கேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CamelCase

கமெல்கேசு (CamelCase) என்பது பல சொற்களைச் சேர்த்து ஒரு கூட்டுச் சொல்லை எப்படி எழுதுவது என்பதற்கான ஒரு வழக்கு ஆகும். இது ஆங்கில மொழியிலும், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் வழக்கில் இருக்கிறது.

பல சொற்களைச் சேர்த்து ஒரு சொல்லாக எழுதும் போது இடை வெளி விடாமலுமலும், ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தை பெரிய எழுத்திலும் (upper case) எழுதுதல் என்பதே இந்த முறை. கூட்ச்சொல்லின் முதல் எழுத்து சிறிய எழுத்தாகவும் (lower case) ஆகவும் இருக்க முடியும். இதை லோவர் கமெல் கேசு (lower camel case) என்பர்.

பயன்பாடு

[தொகு]

வேதியியல் வாய்ப்பாடுகள், பெயர் சுருக்கங்கள், நிரல் மொழியில் எழுதப்படும் பெயர்கள் போன்றவை இவ்வாறு எழுதப்படுவதுண்டு.

நிரல் மொழியில்

[தொகு]

நிரல் மொழியில் மாறிகள், செயற்கூறுகள், கோப்புக்கள் போன்ற கூறுகளுக்கு விளக்கமான பெயர் இடுவது நிரலின் வாசிப்புத் தன்மையை மேம்படுத்தும். இந்தப் பெயர்கள் பொதுவாக்க கூட்டுச் சொல்லாக வரும். இடை வெளி இட்டு எழுதல் கணித்தலில் சில சிக்கல்களை தரும். _ போட்டு எழுதுதல் கூடிய இடத்தை எடுக்கும். எனவே கலம்கேசு முறையை பல நிரலாளர்கள் பயன்படுத்துகிறார்கள். மாறிகளை ArrOrders போன்றும், செயற்கூறுகளை insertOrder போன்றும் எழுதுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமெல்கேசு&oldid=1353565" இலிருந்து மீள்விக்கப்பட்டது