கமுதிக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமுதிக்கோட்டை என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்த ஒரு கோட்டையாகும். இந்தக் கோட்டையானது இராமநாதபுரம் சமஸ்தான மன்னரான முத்துவிஜயரகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகும்.

அமைப்பு[தொகு]

கமுதிக் கோட்டையானது கமுதியில் குண்டாற்றின் வடக்குக் கரையின் பாறைகள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் பாரம்பரிய முறைப்படி கோட்டைவாசல், கொத்தளங்கள், அகழி என்ற கூறுகளிடன் செவ்வக வடிவில் அமைக்கப்படுவதே மரபு. ஆனால் இந்த மரபுகளினின்றும் மாறுபட்டதாக இந்தக் கோட்டையானது வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை அமைத்தவர்கள் பிரெஞ்சு நாட்டு பொறியியல் வல்லுநர்கள் என இராமநாதபுரம் சமஸ்தான மேனுவல் தெரிவிக்கின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முத்துவிஜயரகுநாத சேதுபதி (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 51-52. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமுதிக்கோட்டை&oldid=3581481" இலிருந்து மீள்விக்கப்பட்டது