கமிலா வெலேஜோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கமிலா வெலேஜோ டவ்லிங்
Camila Vallejo - Munich 2012.jpg
கமிலா வெலேஜோ (2012)
26 ஆவது‍ மாவட்ட, நாடாளுமன்ற கீழ் அவை உறுப்பினர்
பதவியேற்பு
11 மார்ச் 2014
முன்னவர் கசுடோவோ கசுபன்
தலைவர் சிலி பல்கலைக் கழக மாணவர் சங்கம்
பதவியில்
24 நவம்பர் 2010 – 16 நவம்பர் 2011
முன்னவர் சூலியோ சர்மியன்டோ
பின்வந்தவர் கேப்ரியல் போரிக்
உறுப்பினர் சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு‍
பதவியில்
அக்டோபர் 2011 – தற்போது‍
தனிநபர் தகவல்
பிறப்பு 28 ஏப்ரல் 1988 (1988-04-28) (அகவை 32)
லா ப்ளோரிடா, சிலி
தேசியம் சிலி
அரசியல் கட்சி சிலி இளைஞர் கம்யூனிஸ்ட்
இருப்பிடம் லா ப்ளோரிடா, சிலி
படித்த கல்வி நிறுவனங்கள் சிலி பல்கலைக்கழகம்
தொழில் புவியியல்

கமிலா அண்டோனியா அமரந்தா வெலேஜோ டவ்லிங் (ஆங்கில மொழி: Camila Vallejo, எசுப்பானியம்: [kaˈmila anˈtonja amaˈɾanta baˈʝexo ˈdaʊlɪŋ]) (vah-YAY-kho) (பிறப்பு ஏப்ரல் 28, 1988) சான்ட்டியாகோ நாடாளு‍மன்ற கீழ் அவை உறுப்பினர். சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு‍ உறுப்பினர். சிலி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராவார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சிலி தலைநகர் சாண்டியாகோவில் 1988-ல் பிறந்த கமிலாவின் தாய் மரிலா டவ்லிங், தந்தை ரொனால்டோ வலேஜா இருவருமே சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். சர்வாதிகாரி அகஸ்டோவின் கைகளில் சிக்கியிருந்த சிலியை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்தவர்கள். சிறு வயதில் இருந்து கம்யூனிச வாசனை உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கமிலா, 2006-ல் புவியியல் படிப்புக்காக சிலி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[2] அங்கே இடதுசாரி மாணவர் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார்.[3]

மாணவர் இயக்கம்[தொகு]

2010 இல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே, சிலி பல்கலைக்கழக மாணவர் பேரவைப் பிரதிநிதி ஆனார். அடுத்த இரண்டாவது ஆண்டில் மாணவர் பேரவைத் தலைவியான போது ஒட்டுமொத்த சிலியும் திரும்பிப் பார்த்தது. 105 வருட சிலி பல்கலைக்கழக வரலாற்றில் இரண்டாவது பெண் தலைவி கமிலாதான். இலவசக் கல்விக்காக கமிலா நடத்திய போராட்டங்களால்தான் உலக அளவில் இவர் பேசப்பட்டார்.

இலவச, மேம்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2011இன் இறுதியில் துவங்கிய மாணவர் போராட்டங்களால் சிலி ஸ்தம்பித்தது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு லட்சம் மாணவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் சாண்டியாகோவை நோக்கி முற்றுகையிட்டனர். 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 100-க்கும் அதிகமான பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. ஒரு முழுக் கல்வி ஆண்டே ரத்துசெய்யப்பட்டது. '2011-2012 சிலி மாணவர் போராட்டம்’ என வரலாறு இதைக் குறிப்பிடுகிறது. 25 வயது கமிலா, ஆளும் கட்சிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்தார். போராட்டங்களில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நிகழ்த்தப்பட்டது. ஒரு மாணவர் உயிரிழந்தார்.[4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இளம் வயதிலேயே சிலி இளைஞர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருக்கிறார்.
[5] நவம்பர் 17, 2013 இல் நடைபெற்ற சிலி பொதுத் தேர்தலில் கமிலா வெலேஜோ 26 ஆவது‍ மாவட்டத்திற்கு‍ நாடாளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
43 சதவிகித ஓட்டுக்கள் பெற்று‍ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.[6]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமிலா_வெலேஜோ&oldid=2826543" இருந்து மீள்விக்கப்பட்டது