கமிசிபாய்
கமிசிபாய் (Kamishibai), “காகித நாடகம்” எனும் பொருள்படும் இது யப்பானிய வீதி நாடகம் மற்றும் கதைகூறலின் ஒரு வடிவமாகும். இது 1929 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட கடுமையான உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் யப்பானில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொலைக்காட்சி வரும் வரை பிரபலமாக இருந்தது. கமிசிபையா என்ற ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டது. அவர் தெரு மூலைகளுக்குச் சென்று விளக்கப்படங்களின் தொகுப்புகளுடன் ஒரு சிறு மேடை போன்ற சாதனத்தில் வைத்து ஒவ்வொரு படத்தையும் மாற்றுவதன் மூலம் கதையைச் சொல்வார்.[1]
கமிசிபாய், யப்பானிய பௌத்தக் கோயில்களில் அதன் ஆரம்பகால தோற்றத்தை கொண்டுள்ளது. அங்கு 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பெளத்த பிக்குகள் மடாலயங்களின் வரலாற்றை விவரிக்க எமாகிமோனோ என்ற சித்திர சுருள்களைப் பயன்படுத்தினர். இது ஒரு கதையை வெளிப்படுத்த படம் மற்றும் உரையின் ஆரம்ப கலவையாகும்.[2]
வரலாறு
[தொகு]தோற்றம்
[தொகு]கமிசிபாயின் சரியான தோற்றம் தெரியவில்லை. 1930 ஆம் ஆண்டில் தோக்கியோவின் சிடாமாச்சி பிரிவில் ஒரு “தெரு மூலையில் காற்று போல்” தோன்றியது.[3] இருப்பினும், கமிசிபாய் யப்பானின் எடோகி (சித்திர கதைசொல்லல்) கலை வரலாற்றில் ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக சோஜூ கிகா (விலங்கு கேலிச்சித்திரங்கள்) என்ற யப்பானின் கியோத்தோவிலுள்ள கோசான்-ஜி கோவிலுக்குச் சொந்தமான நான்கு பட சுருள்கள் யப்பானிய கலைஞரும் துறவியுமான டோபா சோஜோ (1053–1140) வரைந்ததாகக் கூறப்படுகிறது.[4] இந்த சுருள் இந்த காலகட்டத்தில் சமூகத்தை நையாண்டி செய்யும் மானுடவியல் விலங்கு கேலிச்சித்திரங்களை சித்தரிக்கிறது. ஆனால் எந்த உரையும் இல்லை, இது ஒரு கதைக்கு சித்திர உதவியாக அமைந்துள்ளது.[5] எனவே இதனை கமிசிபாயின் நேரடி முன்னோடியாகக் கருதலாம்.
எடோ காலத்தில், குறிப்பாக யப்பானிஅய் கலை வடிவமான யுகியோ-இ (மிதக்கும் உலகின் படங்கள்) மூலம் காட்சி மற்றும் நிகழ்த்து கலைகள் செழித்தன. அதன் கலைஞர்கள் பெண் அழகிகள்; கபுகி நடிகர்கள் மற்றும் சுமோ மல்யுத்த வீரர்கள்; வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து காட்சிகள்; பயணக் காட்சிகள் மற்றும் நிலப்பரப்புகள்; தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்; மற்றும் காமம் போன்ற பாடங்களின் மரத் தொகுதி அச்சிட்டுகள் மற்றும் ஓவியங்களை உருவாக்கினர்.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதைசொல்லிகள் தெரு மூலைகளில் ஒரு கம்பத்தில் தொங்கவிடப்பட்ட ஒரு சுருளுடன் கதைகளைச் சொல்லத் தொடங்கியதால் எடோகி மீண்டும் பிரபலமானது.[6] மெய்சி காலத்தில் (1868–1912), எடோ காலத்தில் இருந்ததைப் போலவே டாச்சி-இ (நிற்கும் படங்கள்) கலைகள் மரக் கம்பங்களில் பொருத்தப்பட்ட உருவங்களின் தட்டையான காகித உருவங்களை (இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் ஓயாங் பொம்மை நாடக வடிவங்களைப் போன்றது) கையாண்ட கலைஞர்களால் கதைகள் கூறப்பட்டது.[6] குழந்தைகளை மகிழ்விக்க பிரசங்கங்களின் போது இந்தப் படங்களைப் பயன்படுத்திய பெருமையும் ஜென் துறவி நிஷிமுராவுக்கு உண்டு.[6]

நவீனப் பயன்பாடு
[தொகு]டொயோட்டா உற்பத்தி முறைமையின் ஒரு பகுதியாக, கமிசிபாய் பலகைகள் ஒரு உற்பத்தி செயல்முறைக்குள் தணிக்கைகளைச் செய்வதற்கான காட்சி கட்டுப்பாட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பலகையில் தொடர்ச்சியான அட்டைகள் வைக்கப்பட்டு, சீரற்ற முறையில் அல்லது அப்பகுதியின் மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்களால் அட்டவணையின்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது பணியிடத்தின் பாதுகாப்பு மற்றும் தூய்மை பராமரிக்கப்படுவதையும் தர சோதனைகள் செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது.[7]
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அமைதியை மேம்படுத்துவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கமிசிபாய் கதைசொல்லல் நடத்தப்பட்டது. 1945இல் இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்ட பல குழந்தைகளில் ஒருவரான சடாகோ சசாகியின் கதையை அடிப்படையாகக் கொண்டு மாகி சாஜி (ஒரு பெளத்த கன்னியாஸ்திரி) ஒரு கமிசிபாயை உருவாக்கினார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schodt, Frederik L. (1997). Manga! Manga! The World of Japanese Comics. Tokyo: Kodansha International Ltd. p. 62.
- ↑ Nash, Eric P. (2009). Manga Kamishibai: The Art of Japanese Paper Theatre. New York: Abrams Comicarts. p. 57.
- ↑ Nash, Eric P. (2009). Manga Kamishibai: The Art of Japanese Paper Theatre. New York: Abrams Comicarts. p. 15.
- ↑ Nash, Eric P. (2009). Manga Kamishibai: The Art of Japanese Paper Theatre. New York: Abrams Comicarts. p. 55.
- ↑ Koyama-Richard, Brigitte (2007). One Thousand Years of Manga. Paris: Flammarion. p. 14.
- ↑ 6.0 6.1 6.2 Nash, Eric P. (2009). Manga Kamishibai: The Art of Japanese Paper Theatre. New York: Abrams Comicarts. p. 61.
- ↑ Miller, Jon (July 6, 2009). "One Point Lesson: Kamishibai". Gemba Panta Rei. Archived from the original on May 17, 2013. Retrieved 2013-10-07.
வெளி இணைப்புகள்
[தொகு]- Atelier Kamishibai Artist Community
- Official Kamishibai Artist Forums
- ZiRKUSOFiA Cuentos y Talleres de Kamishibai.
- Doshin-sha kammishibai books (in Japanese)
- The International Kamishibai Association of Japan (IKAJA) (in ஆங்கிலம்)
- Kamishibai for Kids (in ஆங்கிலம்)
- Storycard Theater
- Kreashibai website and shop (in German)
- Review of Manga Kamishibai: The Art of Japanese Paper Theater on PopMatters.com
- Entry in The Encyclopedia of Science Fiction
- Manga's story starts with kamishibai