கமல் பசதி
{{{building_name}}} | |
---|---|
![]() கமல் பசதி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பெல்காம், [கர்நாடகா]] |
புவியியல் ஆள்கூறுகள் | 15°51′29″N 74°31′17″E / 15.85806°N 74.52139°E |
சமயம் | சமணம் |
கமல் பசதி என்பது கர்நாடகாவின் பெல்காம் நகரில் உள்ள பெல்காம் கோட்டைக்குள் அமைந்துள்ள ஒரு சமணர் கோவில் ஆகும். [1]
கமல் பசதியானது பிர்ச்சிராஜாவால் (Birchiraja) கட்டப்பட்டது. இவர் ஜெய ராயா என்றும் அழைக்கப்படுகிறார். [2] கி.பி. 1204 ஆம் ஆண்டில் ராட்டா வம்சத்தின் நான்காம் கார்த்தவீர்யாவின் [3] அரசவையில் ஒரு அதிகாரியாக இருந்தவர். சுபச்சந்திரபட்டாரகதேவா என்ற ஜெயின் துறவியின் வழிகாட்டுதலின் கீழ் இக்கோவில் கட்டப்பட்டது.[4] கார்த்தவீர்யதேவா மற்றும் யுவராஜகுமார மல்லிகார்ஜுனதேவா ஆகியோர், [5] கி.பி.1205 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட ஒரு கல்வெட்டு படி, இந்தக் கோவிலின் கட்டிடக்கலைஞர்கள் ஆவர்.
கட்டிடக்கலை[தொகு]
கமல் பசதியின் மையக் கூரை குவிமாடத்தில் தாமரை மலர் செதுக்கப்பட்டதால் "கமல்" என்ற பெயரைப் பெற்றது. [6] [7] [8] குவிமாட தாமரையில் 72 இதழ்கள் உள்ளன. இது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் 24 தீர்த்தங்கரர்களைக் குறிக்கிறது. கோவிலின் சுவர்களில் நுணுக்கமான வடிவமைப்புகள், விளிம்பு அழகணிகள் மற்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. [9] கோவில் சுவரின் ஒவ்வொரு போதிகை முடிவிலும் ஒரு நாகப்பாம்பின் சிற்பத்துடன் கூடிய தூண் தாங்குகிறது. தூண்கள் நன்கு செதுக்கி அலங்காரிக்கப்பட்டு நேர்த்தியாக மெருகூட்டப்பட்டுள்ளன. கருவறை வாசல் நன்கு செதுக்கப்பட்டுள்ளது. [10]
மொத்தம் ஐந்து சிறிய கருவறைகளில் தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன; இந்த கருவறைகளுக்கு இடையே ஒரு சிறிய விதானத்தின் கீழ் நிற்கும் நிலையில் நான்கு யட்சர்களும் மற்றும் யட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளனர். கருவறையின் உள்ளே இருக்கும் தூண்கள் மிகப்பெரிதாகவும் சதுரமாகவும் உள்ளன. கதவின் இருபுறமும் உள்ள சுவர் மாடங்களில் சமண தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. [6] இக்கோவிலின் முகமண்டபம் ஒரு கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. கோவிலின் மூலவர் நேமிநாதர் கருப்பு நிற சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். [2] கோவிலில் ரிஷபநாதர் பத்மாசனத்திலும், சுமதிநாதர் கயோத்சர்க தோரணையிலும் மற்றும் பார்சுவநாதர் ஏழு தலை நாகத்துடனும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது தீர்த்தங்கரர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நவக்கிரகத்தின் ஒற்றைக்கல் சிலையும் இந்த கோவிலில் இடம்பெற்றுள்ளது. [9]
கமல் பசதிக்கு அருகில் சிக்கி பசதி மற்றும் பூசாரி இல்லம் உள்ளது. [11]
பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]
கமல் பசதியின் 816வது ஆண்டு நினைவாக [3] டிசம்பர் 2020 அன்று சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.
காட்சியகம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Michell 2013, ப. 242.
- ↑ 2.0 2.1 Patil 2015.
- ↑ 3.0 3.1 The New Indian Express 2020.
- ↑ Van Kooij 2018.
- ↑ Asiatic Society of Bombay 1875.
- ↑ 6.0 6.1 Campbell 1884.
- ↑ James Macnabb Campbell 1884.
- ↑ Subburaj 2009.
- ↑ 9.0 9.1 Perumal 2013.
- ↑ Michell 2013.
- ↑ Burgess 1875, ப. 139.
ஆதாரங்கள்[தொகு]
- The Asiatic Society of Mumbai (1875). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Journal of the Bombay Branch of the Royal Asiatic Society]. 10. Maharashtra: The Asiatic Society of Mumbai. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- James Burgess (archaeologist) (1875). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Indian Antiquary]. 4. Royal Anthropological Institute of Great Britain and Ireland. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- James Macnabb Campbell (August 1884). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Gazetteer of the Bombay Presidency: Belgaum]. Gazetteer of the Bombay Presidency. 21. Bombay: Government Central Press. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- James Macnabb Campbell (1884). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Gazetteer of the Bombay Presidency]. Gazetteer of the Bombay Presidency. 17. Bombay: Government Central Press. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- Van Kooij, Karel R. (2018). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Abia South & Southeast Asian Art]. 1. USA and Canada: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1136176418. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- Subburaj, V. V. K. (2009). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Tourist Guide to Karnataka]. Chennai: Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174780621. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- Michell, George (2013). [[[கூகுள் புத்தகங்கள்|கூகுள் புத்தகங்களில்]] கமல் பசதி Southern India: A Guide to Monuments Sites & Museums]. New Delhi: Roli Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174369031. கூகுள் புத்தகங்களில் கமல் பசதி.
- Patil, Vijyakumar (11 April 2015). "Belgaum Fort declared heritage monument". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/belgaum-fort-declared-heritage-monument/article7091117.ece.
- Perumal, G. Nataraja (7 April 2013). "Kamal Basti: A Jain wonder in stone". The New Indian Express. https://www.newindianexpress.com/lifestyle/spirituality/2013/apr/07/kamal-basti-a-jain-wonder-in-stone-465695.html.
- "Belagavi's ancient Kamal Basadi temple turns 816, special postal cover released". The New Indian Express. 27 December 2020. https://www.newindianexpress.com/states/karnataka/2020/dec/27/belagavis-ancient-kamal-basadi-temple-turns-816-special-postal-cover-released-2241725.html.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் Old Jain Temple, Belgaum தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.