கமல் இரணதிவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமல் இரணதிவே
Kamal Ranadive.jpg
பிறப்பு நவம்பர் 8, 1917
பூனே, மகாராட்டிரம், இந்தியா
இறப்பு2001 (அகவை 83–84)
தேசியம்இந்தியர்
துறைஉயிரணு உயிரியல்
நிறுவனம்புற்றநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் டாட்டா நினைவு மருத்துவகம்
அறியப்பட்டதுபுற்றுநோய் ஆராய்ச்சி
பரிசுகள்பத்ம விபூஷன்

கமல் இரணதிவே (Kamal Ranadive நவம்பர் 8 1917 - 2001) ஒரு இந்திய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளர். புற்றுநோய்க்கும் தீ நுண்மம்களுக்கும் (வைரஸ்களுக்கும்) இடையேயான இணைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தற்காக இவர் அறியப்படுகிறார். இவர் இந்திய மகளிர் அறிவியலாளர் சங்கத்தின் (IWSA) நிறுவன உறுப்பினர் ஆவார். [1] [2] [3]

1960 களில், மும்பை இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இந்தியாவின் முதல் திசு வளர்ப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தை இவர் நிறுவினார். [4] [5]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கமல் 8 நவம்பர் 1917 அன்று புனேயில் பிறந்தார். இவரது பெற்றோர் திங்கர் தத்தாத்ரேயா சமரத் மற்றும் சாந்தபாய் டிங்கர் சமார்ட் ஆவார். இவரது தந்தை புனே பெர்குசன் கல்லூரியில் பயிற்றுவித்த ஒரு உயிரியலாளர் ஆவார். [1] இவர் பள்ளிப்படிப்பை புனேயில் முடித்தார். [2] இவருடைய தந்தை இவரை ஒரு மருத்துவராக்கி, ஒரு மருத்துவருக்கு மணமுடித்து வைக்க விருப்பப்பட்டார். ஆனால் இவர் வேறு விதமாக முடிவு செய்தார். ஃபெர்குசன் கல்லூரியில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை முதன்மை பாடமாகக் கொண்டு படித்தார். 1934 ஆம் ஆண்டில் இவர் தனது இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றார். [5] பின்னர் இவர் புனேயில் வேளாண்மை கல்லூரியில் இடம் பெற்றார். அங்கு இவர் 1943 ஆம் ஆண்டில் தனது முதுகலை அறிவியல் பட்டம் (எம்.எஸ்.சி.) பெற்றார். 1939 ஆம் ஆண்டு மே 13 இல் கணிதவியலாளர் ஜே. டி. இரணதிவே என்பவரை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் வாழத்தொடங்கினார். இவருக்கு அனில் ஜேசிங் என்ற ஒரு மகன் உண்டு. [1]

விருதுகள்[தொகு]

1982 ஆம் ஆண்டில், மருத்துவத்திற்காக பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6] இந்தியாவின் மருத்துவக் கவுன்சிலின் முதல் வெள்ளி விழா ஆராய்ச்சி விருது 1964 இல் வழங்கப்பட்டது. [7] இந்த விருது ஒரு தங்கப் பதக்கம் மற்றும் 15,000 பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.[8] 1964 ஆம் ஆண்டுக்கான ஜி.ஜே. வாட்டுமுல் அறக்கட்டளை நுண்ணுயிரியலுக்கான பரிசை இவருக்கு வழங்கியது.[9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Debus 1968, ப. 1393.
  2. 2.0 2.1 Bhisey 2008, ப. 24–26.
  3. "Founder Members". Indian Women Scientists' Association. 2019-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-23 அன்று பார்க்கப்பட்டது.
  4. Bhisey 2008, ப. 24-26.
  5. 5.0 5.1 Varde 1997, ப. 39.
  6. "Padma Bhushan Awardees". Archives of Government of India. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-23 அன்று பார்க்கப்பட்டது.
  7. Roy 1970, ப. 31.
  8. Link. United India Periodicals. 1964. https://books.google.com/books?id=CzRWAAAAYAAJ. 
  9. IMDA Journal. All India Instrument Manufacturers & Dealers Association. 1965. https://books.google.com/books?id=tfdQAAAAYAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_இரணதிவே&oldid=3547887" இருந்து மீள்விக்கப்பட்டது