கமல்ஜீத் செராவாத்
கமல்ஜீத் செராவாத் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 4 சூன் 2024 | |
| முன்னையவர் | பர்வேசு சாகிப் சிங் |
| தொகுதி | மேற்கு தில்லி |
| மாநகரத் தந்தை தெற்கு தில்லி மாநகராட்சி | |
| பதவியில் 2018–2019 | |
| முன்னையவர் | சியாம் சர்மா |
| பின்னவர் | நரேந்திர சாவ்லா |
| தொகுதி | உறுப்பினர், துவாராக பி பகுதி, புது நில்லி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 செப்டம்பர் 1972 |
| தேசியம் | இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | இராஜ்குமார் செராவாத் |
| பிள்ளைகள் | 2 |
| முன்னாள் மாணவர் | முதுநிலை வணிகவியல், இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் |
| தொழில் | அரசியல்வாதி, விவசாயி |
கமல்ஜீத் செராவாத் (Kamaljeet Sehrawat)(பிறப்பு: செப்டம்பர் 29,1972) ஓர் இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாக மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2007இல் நஜாப்கரில் பாஜக மாவட்ட துணைத் தலைவராக செராவாத் பொறுப்பேற்றார். இவர் 2008இல் மத்தியாலா சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் சுமேசு சோகீனிடம் 6,629 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2009 முதல் 2014 வரை, தில்லி பிரதேச பாஜக செயலாளராக பணியாற்றினார். இவர் 2014 முதல் 2016 வரை பாஜக தில்லி மகளிர் அணியின் தலைவராகப் பதவி வகித்தார்.
2014ஆம் ஆண்டில், தெற்கு தில்லி மாநகராட்சியின் மாநகரத் தந்தைப் பதவிக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2016 மற்றும் 2017க்கு இடையில், செராவாத் தில்லி மாநிலத்தின் பாஜகவின் துணைத் தலைவராக இருந்தார்.[3][4] 2022ஆம் ஆண்டில், செராவாத் துவாரகா பி பகுதி தொகுதியிலிருந்து மாநகர உறுப்பினராகத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[5]
செராவாத் 2016 முதல் 2017 வரை பாஜகவின் தில்லி மாநிலத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். கட்சியின் மூலோபாய திட்டமிடல் மற்றும் வெளிப்புற முயற்சிகளுக்கு பங்களித்தார்.[6] இதைத் தொடர்ந்து, இவர் 2018இல் நிலைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
2024 மக்களவைத் தேர்தலில் மேற்கு தில்லி பாஜக வேட்பாளராக செராவாத் போட்டியிட்டு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]
திருமணம்
[தொகு]செராவாத் இராஜ்குமார் செராவாத்தை மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India Today (13 July 2024). "Women activists | Beating all odds" (in en) இம் மூலத்தில் இருந்து 7 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240807071147/https://www.indiatoday.in/magazine/cover-story/18th-lok-sabha-the-debutants/story/20240722-women-activists-beating-all-odds-2565862-2024-07-13. பார்த்த நாள்: 7 August 2024.
- ↑ "Who is Kamaljeet Sehrawat? Meet BJP's pick for South Delhi Municipal Corporation mayor post". Financialexpress (in ஆங்கிலம்). 2017-05-13. Retrieved 2024-03-09.
- ↑ Staff Reporter (2017-05-19). "Kamaljeet Sehrawat is new south Delhi Mayor" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Delhi/kamaljeet-sehrawat-is-new-south-delhi-mayor/article18511737.ece.
- ↑ "Shazia Ilmi gets berth in BJP's key committee". The Asian Age. 2017-01-16. Retrieved 2024-03-09.
- ↑ "Finally, names of six Standing Committee members declared". The Times of India. 2023-06-09. https://timesofindia.indiatimes.com/city/delhi/finally-names-of-six-standing-committee-members-declared/articleshow/100858316.cms.
- ↑ "Delhi HC sets aside mayor's decision to call re-poll for MCD standing committee". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-05-23. Retrieved 2024-03-09.
- ↑ Mahajan, Satvika (2023-12-08). "Will reach out to people for MCD's next budget: Mayor" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/incoming/will-reach-out-to-people-for-mcds-next-budget-mayor/article67619042.ece.
- ↑ "कमलजीत सहरावत की क्या है राजनीतिक पृष्ठभूमि, BJP ने प्रवेश वर्मा का टिकट काट पश्चिमी दिल्ली सीट से दिया मौका". Hindustan (in இந்தி). Retrieved 2024-03-09.
- ↑ Service, Indo-Asian News (2023-08-19). "BJP announces names of in-charges for all 7 LS seats in Delhi". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-03-09.