கமலேஷ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு
கமலேஷ் சர்மா
5ஆவது பொதுநலவாய நாடுகளின் செயலாளர்-நாயகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 ஏப்ரல் 2008
தலைவர்அரசி எலிசபெத்
அவைத்தலைவர்யோவெரி முசெவேனி
பாட்றிக் மான்னிங்
கம்லா பெர்சாத் பிசெசார்
ஜூலியா கிலார்ட்
கெவின் ரட்
டோனி அபோட்
மகிந்த ராசபக்ச
முன்னையவர்டான் மெக்கின்னோன்
வேந்தர், குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 திசம்பர் 2009
முன்னையவர்ஜார்ஜ் ஜே. மிட்ச்செல்
இந்தியாவின் நிரந்தர சார்பாளர்
ஐக்கிய நாடுகள் அவை
பதவியில்
7 ஆகத்து 1997 – 27 மே 2002
செயலாளர் நாயகம்கோபி அன்னான்
தலைவர்கே. ஆர். நாராயணன்
முன்னையவர்பிரகாஷ் ஷா
பின்னவர்விஜய் கே. நம்பியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 செப்டம்பர் 1941 (1941-09-30) (அகவை 82)
பிரித்தானிய இந்தியா
துணைவர்2
முன்னாள் கல்லூரிகேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்

கமலேஷ் சர்மா (Kamalesh Sharma, 30 செப்டம்பர் 1941)[1] 2008ஆம் ஆண்டிலிருந்து பொதுநலவாய நாடுகளின் தற்போதைய மற்றும் 5ஆவது செயலாளர்-நாயகம் ஆவார். இதற்கு முன்னதாக இலண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையராக (நாட்டுப் பேராளர்) பொறுப்பிலிருந்துள்ளார்.[2]

இளமையும் கல்வியும்[தொகு]

கமலேஷ் சர்மா புது தில்லியின் பராகம்பா சாலையிலுள்ள மாடர்ன் பள்ளியிலும் செயின்ட். இசுடீபன் கல்லூரியிலும் கிங் கல்லூரி, கேம்பிரிச்சிலும் படித்தவர்.[3]

பணி வாழ்வு[தொகு]

1965இலிருந்து 2001 வரை இந்திய வெளிநாட்டுச் சேவையில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். தமது அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் அவையில் ஆகத்து 1997 முதல் மே 2002 வரை இந்தியாவின் நிரந்தரப் பேராளராக பணியாற்றியுள்ளார்.[4] 2002 முதல் 2004 வரை ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பேராளராகப் கிழக்குத் திமோரில் பணியாற்றி உள்ளார். 2004இல் இந்தியாவின் உயர் ஆணையராகப் பிரித்தானியாவிற்கு நியமிக்கப்பட்டார். அரச பொதுநலவாய சமூகத்தின் உதவித் தலைவராக உள்ளார். சூலை 2009 முதல் குயின்சு பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பொறுப்பில் உள்ளார்.[5][6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "New Permanent Representative of India Presents Credentials". ஐக்கிய நாடுகள் அவை. 4 August 1997. http://www.un.org/news/Press/docs/1997/19970804.BIO3087.html. பார்த்த நாள்: 2008-04-06. 
  2. "Kamalesh Sharma is new Commonwealth Secretary-General". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
  3. "Kamalesh Sharma, Indian High Commissioner". Judge Business School, Cambridge. Archived from the original on 2007-11-15. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
  4. "Permanent Representatives of India to the United Nations" (PDF). un.int. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  6. "India to field Kamalesh Sharma for C'wealth job". The Hindu. 2007-06-07 இம் மூலத்தில் இருந்து 2007-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070609222652/http://www.hindu.com/2007/06/07/stories/2007060706971200.htm. பார்த்த நாள்: 2007-11-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேஷ்_சர்மா&oldid=3547912" இலிருந்து மீள்விக்கப்பட்டது