கமலா பாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமலா பாசின்

2017 இல் டாக்காவில் கமலா பாசின்
பிறப்பு கமலா பாசின்
ஏப்ரல் 24, 1946(1946-04-24)
சகீதன்வாலி, பஞ்சாப், இந்தியா
(இன்றைய பஞ்சாப் (பாக்கிஸ்தான்))[1]
இறப்பு 25 செப்டம்பர் 2021(2021-09-25) (அகவை 75)
தில்லி, இந்தியா
தொழில் பெண்ணிய செயற்பாட்டாளர், கவிஞர், எழுத்தாளர்
நாடு இந்தியா
கல்வி முதுகலை
கல்வி நிலையம் இராஜஸ்தான் பல்கலைக்கழகம், மியூன்ஸ்டர் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Borders & Boundaries: Women in India's Partition (book)

கமலா பாசின் (Kamla Bhasin, 24 ஏப்ரல் 1946 – 25 செப்டம்பர் 2021) என்பவர் இந்திய பெண்ணிய ஆர்வலர், கவிஞர், எழுத்தாளர், சமூக அறிவியலாளர் ஆவார். 1970 இல் தொடங்கிய பாசினின் பணியானது பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டுள்ளது. [2] இவர் இந்தியாவின் புது தில்லியில் வசிக்கிறார். இவர் சங்கத் என்ற தெற்காசிய பெண்ணிய நெட்வர்க் அமைப்பை நிறுவிய பணிக்காகவும், இவரது க்யுங்கி மெயின் லட்கி ஹூன், முஜே பத்னா ஹை என்ற கவிதைக்காகவும் மிகவும் பிரபலமானவர். [3] 1995 ஆம் ஆண்டில், பிரபலமான கவிதையான ஆசாதி (சுதந்திரம்) என்ற கவிதையின் புதுப்பொலிவாக்கப்பட்ட, பெண்ணிய பதிப்பை ஒரு மாநாட்டில் அவர் வாசித்தார். இவர் நூறு கோடியினர் கிளர்ச்சி தெற்காசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

சங்கத் அமைப்பில் பணியாற்றுவதற்காக 2002 ஆம் ஆண்டில் ஐ.நா.வில் தனது வேலையை ராஜினாமா செய்தார். சங்கத்தில் இவர் ஒரு நிறுவன உறுப்பினர் மற்றும் ஆலோசகர் ஆவார். [4] பெண்ணியக் கோட்பாட்டையும் சமூக செயல்பாட்டையும் இணைக்கும் வகையில் ஆதரித்து வாதாடுதலை இவர் நம்புகிறார். பழங்குடி மற்றும் உழைக்கும் சமூகங்களைச் சேர்ந்த வறிய பெண்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட சமூகங்களுடன் நெருங்கிச் செல்ல பெரும்பாலும் சுவரொட்டிகள், நாடகங்கள், பிற எழுத்தறிவு அற்ற முறைகளைப் பயன்படுத்துகிறார். பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, முழக்கமிடுதல் சமூக அணிதிரட்டலுடன் இருக்க வேண்டும் என்பதை இவர் எப்போதும் பராமரித்து வருகிறார். [5]

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் தன்னை 'தி மிட்நைட் ஜெனரேஷன்' என்று அழைக்கிறார், இது சுதந்திரத்தின் போது பிறந்த இந்தியர்களின் தலைமுறையைப் பற்றிய குறிப்பு ஆகும். இவர் ஆறு உடன்பிறப்புகளில் நான்காவதாக பிறந்தவர். இவரது தந்தை ராஜஸ்தானில் மருத்துவராக இருந்தார். இவர் இந்தியாவில் உள்ள கிராமங்களைச் சுற்றி வளர்ந்தார், மேலும் இது இந்திய கிராமங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய புரிதலை இவருக்கு உருவாக உதவியது. அந்த அனுபவம் இவரது வாழ்க்கையிலும் எதிர்கால வாழ்க்கையிலும் ஒரு கருவியாக இருந்தது. இவர் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை அரசு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

இவர் சேவா மந்திரில் பணிபுரிந்த போது ராஜஸ்தானில் தனது (தற்போது முன்னாள்) கணவரை சந்தித்தார். தன் கணவர் ஆச்சரியமான பெண்ணிய மனிதர் என்றும் முற்போக்கான கருத்துக்களை ஆதரித்தார் என்றும் இவர் பின்னர் விவரித்தார். இவரது கணவர் தங்கள் பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால் பெற்றோர் இரு வரின் முதலெழுத்தையும் சேர்த்தார், மேலும் பாசினின் 70 வயதான தாயார் இவர்களிடம் வந்தபோது ஆதரவாக இருந்தார். இப்படி இருந்த இவரின் கணவர், பின்னர் இவர் மீது வன்முறையை பிரயோகிக்கவும், வேரொரு பெண்ணுடன் தொட்வை வைத்துக் கொள்ளவும் துடங்கினார் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இவர்களின் வாழ்கையில் பிரிவு உண்டானது.

தனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு தனது அன்பான விடலை வயது மகனின் வயது மரணம் என்று கருதுகிறார். ஒரு தடுப்பூசியின் மோசமான எதிர்விளைவால் இவரது இன்னொரு மகன் ஊனமுற்றார்.

கல்வி மற்றும் தொழில்[தொகு]

அரசியல்மயமாக்கலின் ஆரம்பம்[தொகு]

பாசின் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படித்தார், பின்னர் மேற்கு ஜெர்மனியில் உள்ள மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தார். பின்னர், பேட் ஹொன்னெப்பில் வளரும் நாடுகளுக்கான ஜெர்மன் அறக்கட்டளையின் சார்புநிலை மையத்தில் ஒரு ஆண்டு கற்பித்தார். [5] பின்னர் இவர் இந்தியாவுக்குத் திரும்பி, அங்கு கற்றுக்கொண்டவற்றைச் செயல்படுத்த விரும்பினார். எனவே, இவர் இராஜஸ்தானில் செயல்படும் சேவா மந்திர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இந்திய சமுதாயத்தில் சாதி எவ்வாறு ஒரு சமூக நோயாக உள்ளது என்பதையும், ஆட்சியில் கூட பாகுபாடு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் பற்றி அவர் இங்கு கற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் அகழ்வதற்கு அரசு நிதியைப் பெற்றதால் பிராமணரின் கிணறுகள் ஒருபோதும் வறண்டுவிடுவதில்லை என்பதில் இது வெளிப்பட்டது. சாதியும் பெண்ணியமும் குறுக்குவெட்டு என்பதை இவர் உணர்ந்தார்.

எழுத்துக்கள் மற்றும் பிற படைப்புகள்[தொகு]

இவர் ஆணாதிக்கத்தையும் பாலின பாகுபாட்டைப் புரிந்துகொள்வது பற்றி புத்தகங்கள் மற்றும் சிறு பிரசுரங்களை எழுதியுள்ளார். இவை சுமார் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மக்கள் பாலின சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவ இப்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. பிந்தியா தாப்பருடன் இணைந்து எழுதி 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்ட இவரது புத்தகம், சிரிக்கும் விஷயங்கள், 2013 இல் இதன் மறுபதிப்பு வெளியிடப்பட்டது, இப்போது இதன் இந்தி பதிப்பு ( ஹஸ்னா தோ சங்கர்ஷோ மேன் பீ ஸாரூரி ஹை) வெளியாகியுள்ளது. இவரின் பிற முக்கியமான ஆக்கங்கள் பின்வருமாறு: எல்லைகள் மற்றும் வரம்புகள்: இந்தியப் பிரிவினையில் பெண்கள், [6] பாலினப் பாகுபாட்டைப் புரிந்துகொள்வது, [7] ஆணாதிக்கம் என்றால் என்ன? என்பவன ஆகும். [4] இவர் தெற்காசியாவில் நூறு கோடியினர் கிளர்ச்சி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். [8] புது தில்லியில் 2013 ஆம் ஆண்டு நூறு கோடியினர் கிளர்ச்சி நிகழ்வில், இவர் தனது புகழ்பெற்ற ஆசாதி கவிதையை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து மிகுந்த பாராட்டுதலைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கமலா பாசின்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_பாசின்&oldid=3294992" இருந்து மீள்விக்கப்பட்டது