கமலா நேரு பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலா நேரு பூங்கா (Kamala Nehru Park, Pune) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேயில், எரண்ட்வானா, மருத்துவர் கேட்கர் சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா 10 ஏக்கர் பரப்பளவில், மெல்லோட்டத் தடம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நீரூற்று மற்றும் புல்வெளிகளுடன் அமைந்துள்ளது. இங்கு இராணுவ தாரை உந்து விமானம் (எச். ஏ. எல். 24 மாருட்) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் பிரதான வாயிலுக்கு வெளியே உணவுப் பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகள் உள்ளன. இந்த பூங்காவிற்கு அருகில் தத்தா கோவில் உள்ளது. இந்த பூங்கா டெக்கான் ஜிம்கானாவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kamla Nehru Park in Pune". Pune Site. Archived from the original on 19 December 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_நேரு_பூங்கா&oldid=3390149" இலிருந்து மீள்விக்கப்பட்டது