கமலா சிறீவத்சவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா சிறீவத்சவா

பேராசிரியர் கமலா சிறீவத்சவா (Kamla Srivastava, 1 செப்டம்பர் 1933 – 4 பெப்ரவரி 2024)[1] ஓர் இந்திய நாட்டுப்புற இசை பாடகராவார்.[2] இலக்னோ பல்கலைக்கழகம் என்று கருதப்படும் பத்கண்டே இசை நிறுவனத்தின் இசைத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2][3] ஒரு கலைஞராக இவர் மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளில் பாட அழைக்கப்பட்டார். இவர் கலைஞர்கள் மற்றும் கவிஞர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன், இலங்கை வானொலி போன்றவற்றில் நாட்டுப்புற, மெல்லிசை, பாரம்பரிய இசைகளை பாடுகிறார்.[2] ஒரு கவிஞரானை இவர், அவதி, போச்புரி, இந்தி ஆகியவற்றில் பாடல்களை எழுதுகிறார்.[2][4]

இவர், கீத் வத்திகா என்ற தனது புத்தகத்தை 8 ஜனவரி 2010 அன்று வெளியிட்டார். இவர், சங்கீத நாடக அகாதமி , உத்தரபிரதேச சன்ஸ்தான், போன்ற அமைப்புகளிலிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]

உத்தரப் பிரதேச அரசின் மிக உயர்ந்த விருதான யாஷ் பாரதி விருதை மார்ச் 2016[3][5][6] பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mellifluous Voice Of Singer Kamla Srivastava Falls Silent". The Times of India. 6 February 2024. https://timesofindia.indiatimes.com/city/lucknow/remembering-the-legendary-singer-kamla-srivastava-obituary/amp_articleshow/107444214.cms. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Prof. Kamla Srivastava - Folk Music artiste of India". www.beatofindia.com. Archived from the original on 2020-07-29. பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.
  3. 3.0 3.1 "PressReader.com - Your favorite newspapers and magazines". www.pressreader.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  4. Srivastava, Shefali (2017-04-22). "इन्होंने लिखे बेटियों के लिए सोहर, लखनऊ की लोकगायिका कमला श्रीवास्तव से बातचीत". www.gaonconnection.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.
  5. "विवादों में अखिलेश का 'यश भारती', मुख्य सचिव की पत्नी के नाम पर उठे सवाल". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  6. Pioneer, The. "CM presented Yash Bharati awards". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_சிறீவத்சவா&oldid=3888655" இலிருந்து மீள்விக்கப்பட்டது