கமலா சக்ரவர்த்தி
கமலா சக்ரவர்த்தி (Kamala Chakravarty) (பிறப்பு சரஸ்வதி கமலா சாஸ்திரி, 1928) ஓர் இந்தியப் பாரம்பரிய இசைக்கலைஞரும் மற்றும் முன்னாள் நடனக் கலைஞரும் ஆவார். இவர் சித்தார் கலைஞர் ரவி சங்கருடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். 1967 முதல் 1970 களின் பிற்பகுதி வரை, மான்டேரி சர்வதேச பாப் விழா (1967), வயலின் கலைஞர் எகுடி மெனுகினின் மனித உரிமைகள் தின இசை (1967) வங்காளதேசத்திற்கான கச்சேரி (1971) மற்றும் இந்தியாவின் இசை விழா (1974) உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் இணைந்து பாடியுள்ளார். 1967 முதல் 1981 வரை சங்கருடன் அவரது "இரண்டாவது மனைவியாக" சேர்ந்து வசித்து வந்தார். அதே நேரத்தில் ரவிசங்கருக்கு இசைக்கலைஞரும் ஆசிரியருமான அன்னபூர்ணா தேவியுடன் முதல் திருமணம் நடந்திருந்தது.[1]
இளமை வாழ்க்கை
[தொகு]தனது பதின்ம வயதிலேயே, கமலா உதய் சங்கரின் நடன நிறுவனத்தில் பயிற்சி பெற்று நடித்தார். இவர் புகழ்பெற்ற இந்துத்தானி இசை பாடகியான லட்சுமி சங்கரின் தங்கை ஆவார். 1945 இல் திரைப்பட இயக்குனர் அமியா சக்ரவர்த்தியை மணந்தார்.
கமலா, 1928 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை ஆர். வி. சாஸ்திரி, மகாத்மா காந்தியின் ஹரிஜன் என்ற இதழின் ஆசிரியர் ஆவார்.[2] தனது மூத்த சகோதரி இலட்சுமியுடன் இணைந்து, உத்தராகண்டம் மாநிலத்தின் அல்மோராவைத் தளமாகக் கொண்ட நவீன நடனத்தின் முன்னோடியான உதய் சங்கரின் இந்திய கலாச்சார மையத்தில் படித்தார்.[3][4] பல்வேறு பாரம்பரிய நடன மரபுகளில் சங்கரன் நம்பூதிரி (கதகளி ) கந்தப்பன் பிள்ளை (பரதநாட்டியம்) மற்றும் அமோபி சின்ஹா (மணிப்புரி) ஆகியோரிடம் பயின்றார்.[5][6]
1941 ஆம் ஆண்டில் அல்மோராவில், உதய் சங்கரின் சகோதரர் ராஜேந்திரனுக்கு அப்போது பதினைந்து வயதாக இருந்த லட்சுமியின் திருமணத்தில் சக்ரவர்த்தி கலந்து கொண்டார். அங்கு இவர் சங்கர் சகோதரர்களில் இளையவரான எதிர்கால சித்தார் நிபுணர் ரவி சங்கரை சந்தித்தார். கமலா இந்த நேரத்தில் சரஸ்வதி சாஸ்திரி என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் தான் தனது முதல் பெயராக கமலாவைப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும் தனது இரண்டாவது சுயசரிதையான இராக மாலா (1997) இல் நினைவு கூர்ந்தார்.[7]
மும்பை வாழ்க்கை
[தொகு]இரண்டாம் உலகப் போரின் பொருளாதார விளைவுகள் 1944 ஆம் ஆண்டில் உதய்சங்கரின் அகாதமியை மூட கட்டாயப்படுத்தியது.[8] அதன் பிறகு கமலா கொல்கத்தாவுக்குச் சென்றார். பின்னர், மும்பைக்கு அருகிலுள்ள மலாடுவிலுள்ள தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் சேர்ந்தார்.[9] There, Rajendra worked as a scriptwriter,[10][11] அங்கு, இராஜேந்திரன் ஒரு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்தார். இந்த நேரத்தில் ரவி சங்கர் தன்னை ஒரு இசைக்கலைஞராகவும் இசையமைப்பாளராகவும் நிலைநிறுத்த முயன்று கொண்டிருந்தார்.[12] 2012 ஆம் ஆண்டில், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ரவிசங்கர், அவரது மனைவி அன்னபூர்ணா தேவி மற்றும் சாஸ்திரி சகோதரிகள் ஆகியோரை “இசை மற்றும் நடனத்தில் ஆர்வத்துடன் இருக்கும் சமகாலத்தவர்கள்” என்று எழுதியது.[2]
திருமணம்
[தொகு]இந்த காலகட்டத்தில் ரவி சங்கருக்கும் கமலாவிற்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவரது குடும்பத்தினர் இவருக்கும் மும்பை திரைப்பட இயக்குனர் அமியா சக்ரவர்த்திக்கும் இடையில் அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்தனர். 1945 செப்டம்பரில் நடந்த திருமணத்திற்குப் பிறகு, கமலாவின் தொழில்முறை லட்சியங்கள் ஓரங்கட்டப்பட்டன.[13] அதே நேரத்தில் ரவி சங்கர் அந்தேரியில் குடிபெயர்ந்தார்.[9]
1957 இல் அமியா சக்ரவர்த்தி இறந்ததைத் தொடர்ந்து, சங்கர் மற்றும் கமலா தங்கள் உறவை புதுப்பித்தனர். 1963 முதல் அவரது கின்னாரா இசைப் பள்ளி நடத்த கமலா உதவினா. 1967 இல் சங்கர் அன்னபூர்ணா தேவியை விட்டு பிரிந்த பிறகு, இவர்கள் 1981 வரை அமெரிக்காவில் ஒன்றாக வாழ்ந்தனர்.
அன்னபூர்ணா இறுதியாக 1982 இல் சங்கருக்கு விவாகரத்து வழங்கிய நேரத்தில், சங்கரும் கமலாவும் பிரிந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hard to say no to free love: Ravi Shankar". Press Trust of India. Rediff.com. 13 May 2003. Archived from the original on 23 October 2012. Retrieved 18 July 2009.
- ↑ 2.0 2.1 Ratnottama Sengupta, "Pandit Ravi Shankar: Music was his universe, his love, his weakness", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16 December 2012 (retrieved 4 December 2013).
- ↑ Shankar, Raga Mala, pp. 91, 95, 105.
- ↑ Sunil Kothari, "Exhibition – Celebrating Creativity: Life & Work of Uday Shankar" பரணிடப்பட்டது 14 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், IGNCA (retrieved 4 December 2013).
- ↑ Shankar, Raga Mala, p. 95.
- ↑ Massey, p. 223.
- ↑ Shankar, Raga Mala, p. 105.
- ↑ Shankar, My Music, My Life, pp. 74–75, 86.
- ↑ 9.0 9.1 Extract from Swapan Kumar Bondyopadhyay, An Unheard Melody: Annapurna Devi, mid-day.com, 15 May 2005 (retrieved 4 December 2013).
- ↑ World Music: The Rough Guide, p. 92.
- ↑ Suresh Kohli, "Patita (1953)", தி இந்து, 6 July 2012 (retrieved 4 December 2013).
- ↑ Lavezzoli, p. 54.
- ↑ Shankar, Raga Mala, pp. 105–06.
ஆதாரங்கள்
[தொகு]- Harry Castleman & Walter J. Podrazik, All Together Now: The First Complete Beatles Discography 1961–1975, Ballantine Books (New York, NY, 1976; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-25680-8).
- Collaborations, book accompanying Ravi Shankar–George Harrison Collaborations box set (Dark Horse Records, 2010; produced by Olivia Harrison; package design by Drew Lorimer & Olivia Harrison).
- In Celebration, booklet accompanying Ravi Shankar: In Celebration box set (Angel/Dark Horse, 1995; produced by George Harrison & Alan Kozlowski; package design by Rick Ward/The Team Design Consultants).
- Peter Lavezzoli, The Dawn of Indian Music in the West, Continuum (New York, NY, 2006; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8264-2819-3).
- Simon Leng, While My Guitar Gently Weeps: The Music of George Harrison, Hal Leonard (Milwaukee, WI, 2006; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4234-0609-5).
- Reginald Massey, India's Dances: Their History, Technique, and Repertoire, Abhinav Publications (New Delhi, NCT, 2004; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-434-1).
- Ravi Shankar, My Music, My Life, Mandala Publishing (San Rafael, CA, 2007; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60109-005-8).
- Ravi Shankar, Raga Mala: The Autobiography of Ravi Shankar, Welcome Rain (New York, NY, 1999; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56649-104-5).
- World Music: The Rough Guide (Volume 2: Latin and North America, Caribbean, India, Asia and Pacific), Rough Guides/Penguin (London, 2000; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85828-636-0).