உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா கேசுவானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா கேசுவானி
பிறப்பு(1934-08-27)27 ஆகத்து 1934
கராச்சி, சிந்தி, இந்தியா
இறப்பு9 மே 2009(2009-05-09) (அகவை 74)
செய்ப்பூர்
தேசியம்இந்தியா
பணிபின்னணி பாடகர், நாட்டுப்புற பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1950–2000

கமலா கேசுவானி (Kamla Keswani-27 ஆகத்து 1934-9 மே 2009) ஓர் இந்திய நாட்டுப்புற மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இந்தியாவில் இவர் பிரபலமான சிந்தி மொழி பாடகர்களில் ஒருவராக இருந்தார்.

இளமை[தொகு]

கமலா 1934 ஆகத்து 27 அன்று பிரித்தானிய இந்தியாவில் (இப்போது பாக்கித்தான்) சிந்துவில் உள்ள கராச்சியில் பிறந்தார். இவரது பெற்றோர் சுக்கூரைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை கோவிந்த் ராம் மத்னானி ஒரு தொலைப்பேசி இயக்குநர் ஆவார்.[1] சுக்கூரில் உள்ள பள்ளியில் பயின்ற கமலாவிற்கு, இந்தியப் பிரிவினை நடந்தபோது 13 வயது மட்டுமே. மற்ற இந்து சிந்தி மக்களைப் போலவே, 1947-இல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து முதலில் ஜோத்பூரிலும், பின்பிகானேரிலும் இறுதியாக செய்ப்பூரிலும் குடியேறினார். செய்ப்பூரில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர், இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பள்ளி நாட்களிலிருந்தே இசை மற்றும் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

பாடகராக[தொகு]

அனைத்திந்திய வானொலியில் தனது பாடும் வாழ்க்கையைத் தொடங்கினார். சகோரா அல்லது லடா, சூஃபி கலாம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் என்று அழைக்கப்படும் பல திருமணப் பாடல்களைச் சிந்தி மற்றும் இராசத்தானி மொழிகளில் பாடினார்.[2] பிரபலமான சில பாடல்கள் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் நிறுவனம் மற்றும் அனைத்திந்திய வானொலியினால் பதிவு செய்யப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திருமண விருந்துகள், சமூகக் கூட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடியுள்ளார். இவர் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது பாடல்களின் பல இசைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.[3]

இசைக்கலைஞர் சி. அர்ஜுன் இவரைச் சிந்தி திரைப்படப் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தினார்.[4] பின்வரும் சிந்தி மொழி இந்தியத் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார்.[5]

மரணம்.[தொகு]

கமலா கேசுவானி 9 மே 2009 அன்று இந்தியா செய்ப்பூரில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ڪملا ڪيسواڻي : راڳ کي عروج بخشيندڙ گلوڪاره". SindhSalamat. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
  2. Malhi, Gobind (October 1991). ادب ۽ اديب (Literature and Literary Person) (in Sindhi). Ulhasnagar, India.: Sindhi Times Publication. p. 4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Ramchandani, Deepak. Sindhis in Film Industry (PDF) (in English). p. 12.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. "چندناڻي ارجن (سي ارجن) : (Sindhianaسنڌيانا)". www.encyclopediasindhiana.org (in சிந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  5. "Kamla Keswani - Encyclopedia of Sindhi". sindhiwiki.org. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_கேசுவானி&oldid=3908063" இலிருந்து மீள்விக்கப்பட்டது