கமலா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமலா நதி
Kamala river near Hatpate-5, Sindhuli, Nepal.png
கமலா ஆறு
அமைவு
Countryநேபாளம், இந்தியா
மாநிலம்பீகார்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமைதான் அருகே, சிந்துலியகாதி, சிந்துலி மாவட்டம், நேபாளம்
 ⁃ ஆள்கூறுகள்27°15′N 85°57′E / 27.250°N 85.950°E / 27.250; 85.950
 ⁃ ஏற்றம்1,200 m (3,900 ft)
முகத்துவாரம்பாகமதி
 ⁃ அமைவு
பத்லகாட், ககரியா மாவட்டம், ஜான்ஜார்பூர் (மதுபனி), பீகார், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
25°33′54″N 86°35′06″E / 25.56500°N 86.58500°E / 25.56500; 86.58500ஆள்கூறுகள்: 25°33′54″N 86°35′06″E / 25.56500°N 86.58500°E / 25.56500; 86.58500
நீளம்328 km (204 mi)

கமலா நதி (Kamala River) நேபாள நாட்டில் உருவாகி இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வழியாக பாய்கிறது. இந்த ஆறு நேபாளத்திலுள் சிந்துலி மாவட்டத்தில் சவ்வுரி மலைத் தொடரில் சுமார் 3900 அடியின் மேல் உருவாகிறது.[1][2][3] இது தெற்கு திசையில் உள்ள கமலா கோஜ் வழியாக பாய்கிறது. கமலா நதி தனுசா மாவட்டங்களுக்கு இடையை எல்லையை உருவாக்கிறது. இதனால் மழைக் காலத்தில் நதிக் கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்படுத்திகிறது. தாவோ நதியும் பைஜ்நாத் கோலா நதியும் கமலா நதியுடன் மைனி என்ற இடத்தில் இணைகிறது.[4]

கமலா நதி இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள ஜைநகர் வழியாக நுழைகிறது. [5] இதன் கிளைகளில் ஒன்று பாகமதி வழியாக பாய்கிறது மற்றொன்று கோசி ஆறு வழியாக பாய்கிறது.[6]

கமலா நதி பாலன் நதியை பின்பற்றுவதால் கமலா-பாலன் எனறும் அழைக்கபடுகிறது.

துணை நதிகள்[தொகு]

கமலா நதியின் முக்கிய துணை நதிகள் தாவோ, பைஜ்நாத் கோலா, மைனாவதி, சோனி, பாலன், திரிசுலா மற்றும் சுதாகா ஆகியவை.

நதியின் விபரங்கள்[தொகு]

கமலா நதியின் மொத்த நீளம் 328 கிலோ மீட்டர் (204 மைல்)கொண்டது. இதில் 208 கிலோமீட்டர் (129 மைல்) நேபாளத்திலும், மீதமுள்ள 120 கிலோமீட்டர் (75 மைல்) இந்தியாவிலும் உள்ளது. இந்த நதி மொத்த நீர்ப்பிடிப்பு பரப்பளவு 7,232 சதுர கிலோமீட்டர் (2,792 சதுர மைல்), இதில் 4,488 சதுர கிலோமீட்டர் (1,733 சதுர மைல்) இந்தியாவில் பீகாரிலும், மீதமுள்ள 2,744 சதுர கிலோமீட்டர் (1,059 சதுர மைல்) நேபாளத்திலும் உள்ளது. சராசரி ஆண்டு மழை 1,260 மில்லிமீட்டர் (50 அங்குலம்). பீகாரில் பயிர் செய்யப்பட்ட பகுதி 2,744 சதுர கிலோமீட்டர் (1,059 சதுர மைல்). பீகாரில் உள்ள கமலா படுகையின் மக்கள் தொகை 3.9 மில்லியன் ஆகும்.[7]

வெள்ள பெருக்கு[தொகு]

2003 ஆண்டில் கமலா மற்றும் அதன் துணை நதிகளில் ஏற்பட்ட வெள்ளபதிப்பால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கபட்டனர். [8]

இந்தியாவில் இந்த வெள்ள பெருக்கால் பாதிக்கபட்ட 57 சதவீதம் பீகாரில் வாழும் மக்களாவர். பீகாரின் மொத்த பரப்பளவில் சுமார் 73.06 சதவிதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. [9]

நேபாளத்தை ஒட்டியுள்ள பீகார் சமவெளியில் பல நதிகள் கடக்குன்றன. கோசி, பாகமதி மற்றும் கமலா பாலன் ஆகிய நதிகள் நேபாளத்தில் உருவாகி இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வழியாக பாய்கிறது.

பீகார் 1978, 1987, 1998, 2004 மற்றும் 2007 ஆண்டுகளில் பெரும் வெள்ள பெருக்கால் பாதிக்கபட்டது. 2004 ஆண்டு 23,490 சதுர கிலோமீடட்ர்க்கு பக்குரி கன்டக், கமலா, பாகமதி போன்ற நதிகள் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 800 மேற்பட்டவர்கள் இறந்தனர்.[10]

கமலா பல்நோக்கு திட்டம்[தொகு]

கமலா பல்நோக்கு திட்டத்தில் நேபாளத்தின் தனுசா மாவட்டம் மற்றும் சிராகா மாவட்டம் ஆகியவற்றில் கமலா நதியில் சேமிப்பு அணை கட்டுவதும் அடங்கும். இந்த திட்டத்தின் முலம் சும்மர் 30 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சக்தியை உருவாக்க முடியும். இருப்பினும் இந்த திட்டத்தில் பெரும் சவால்கள் உள்ளது. ஏன் என்றால் வடக்கு பீகார் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். 1998 ஆம் ஆண்டில் தர்பங்கா என்னும் இடத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பகுதியில் பெரிய அணைகள் கட்டும் திட்டம் இதில் இடம் பெற்றுள்ளன. 1988ஆம் ஆண்டால், மதுபனி மாவட்டத்தில் கமலா நதிப் பாதை பூகம்ப விரிச்சல் காரணமாக உடைந்தது.

சான்றுகள்[தொகு]

  1. http://fmis.bih.nic.in/Riverbasin.htmlபார்வை நாள் 2010-10-15
  2. http://fmis.bih.nic.in/Riverbasin.html பார்வை நாள் 2015
  3. https://books.google.com/books?id=ZKs1gBhJSWIC&q=Kamala+Balan+Hydrology+and+Water+Resources+of+India&pg=PA359 பார்வை நாள் 2010-10-10
  4. http://www.india9.com/i9show/Kamala-River-64787.htm பார்வை நாள் 2010-10-10
  5. http://fmis.bih.nic.in/Riverbasin.htmlபார்வை நாள் 2010-10-15
  6. http://www.india9.com/i9show/Kamala-River-64787.htm
  7. http://fmis.bih.nic.in/Riverbasin.htmlபார்வை நாள் 2010-10-15
  8. தி இந்துhttp://www.hinduonnet.com/2003/07/13/stories/2003071300521100.htm பார்வைை நாள்
  9. http://www.ssvk.org/north_bihar_flood/bagmati_flood_2009.pdf பார்வை நாள் 2010-10-10
  10. http://www.ssvk.org/north_bihar_flood/bagmati_flood_2009.pdf பார்வை நாள் 2010-10-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_ஆறு&oldid=3062407" இருந்து மீள்விக்கப்பட்டது