கமலாசாகர்
தோற்றம்
| கமலாசாகர் | |
|---|---|
| அமைவிடம் | திரிபுரா |
| வகை | நீர்த்தேக்கம் |
| வடிநில நாடுகள் | இந்தியா |
கமலாசாகர் (Kamalasagar) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள ஒரு செயற்கை ஏரியாகும். 15-ஆம் நூற்றாண்டில் திரிபுராவின் அரசர் தன்யா மாணிக்யா இந்த ஏரியை உருவாக்கினார். சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடம் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. நவராத்திரித் திருவிழாவின் போது ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் இங்கு திருவிழா நடைபெறுகிறது.
அரசியல்
[தொகு]இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக கமலசாகர் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.