கமர் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமர் ரகுமான்
Qamar Rahman
பிறப்புசாயகான்பூர்
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியா
துறைநுண்நச்சியல், நுரையீரல் உயிர்வேதியியல், மரபுசார் நச்சு
பணியிடங்கள்லக்னோ பல்கலைக்கழகம், IITR
கல்வி கற்ற இடங்கள்ஆக்ரா, புனித ஜான் கல்லூரி
விருதுகள்விஞ்ஞான விபூசன் விருது (2013)

கமர் ரகுமான் (Qamar Rahman) ஓர் இந்திய அறிவியலாளராவார். கடந்த 40 ஆண்டுகளாக மீநுண் துகள்களின் உடலியல் விளைவுகளைப் புரிந்துகொள்ள விரிவாக பணியாற்றியுள்ளார். கல்நார் அழற்சி, கற்பலகை தூசி, வீடு மற்றும் சுற்றுச்சூழல் துகள் மாசுபாடு, தொழில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகிய துறைகளில் இவர் அனைத்துலக அளவில் அறியப்படுகிறார். [1]

தற்போது இந்தியாவின் லக்னோ நகரிலுள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கல்வித் தலைவராக உள்ளார். செருமனி நாட்டின் ரோசுடோக் நகரில் அமைந்துள்ள ரோசுடோக் பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு கமருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. [2] 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை கமருக்கு கிடைத்தது. கல்நார், புகைக்கரி மற்றும் பல மாசுபடுத்திகளின் நச்சுத்தன்மை குறித்து கமர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் நச்சு இரசாயனங்கள் வெளிப்படுவது பற்றிய ஒரு படத்தையும் இவர் தயாரித்துள்ளார்.

நுண்துகள் தைட்டானியம் ஈராக்சைடு தொடர்பான இவருடைய ஒரு கருத்து பல முறைகள் மேற்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lilavathi's Daughters".
  2. "Honorary Doctorate".
  3. முழு விவரம் PMC தளத்தில்: 124095

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமர்_ரகுமான்&oldid=3251930" இருந்து மீள்விக்கப்பட்டது