கமர்கான் விண்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமர்கான் விண்கல் (Kamargaon meteorite) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள கோலாகாட்டு மாவட்டத்தில் உள்ள கமர்கான் நகரில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விழுந்தது.[1] அசாம் கிராமத்தில் விழுந்த இந்த விண்கல் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பட்டையில் பெரும்பாலான சிறுகோள்கள் உள்ளன. கமர்கான் விண்கல் 6.4 கிலோமீட்டர் அளவுள்ள ஒரு பெரிய சிறுகோளில் இருந்து வந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. விண்வெளியில் உள்ள சிறுகோள்களும் பூமியில் விழுந்த விண்கற்களும் பூமியில் உயிர் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பெரிய ஆதாரமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.[2]

காரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்திய ஆய்வில், சூரியக் குடும்பத்திலிருந்து கிடைத்த ஒரு விண்கல்லில் முதல் முறையாக சில அரிய வகை கனிமங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் சப்பானின் இரோசிமா பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்துள்ளனர். மேலும் இந்நிகழ்வு புவி இயற்பியல் ஆராய்ச்சி-கிரகங்கள் இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினத்தந்தி (2022-12-19). "அசாமில் கிடைத்த விண்கல்லில் புதைந்துள்ள பூமியின் தொடக்கம் பற்றிய ரகசியம்; விஞ்ஞானிகள் தகவல்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
  2. Pacha, Aswathi (2021-06-26). "Study on meteorite provides clues to Earth's mantle". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமர்கான்_விண்கல்&oldid=3622985" இலிருந்து மீள்விக்கப்பட்டது