கமண்டலம்



கமண்டலம் (சமசுகிருதம்:कमण्डलु) பரத கண்ட ரிஷிகள், சாதுக்கள் மற்றும் யோகிகள் தங்களின் பூசைகளுக்கும், நீர் அருந்துவதற்கும், நீர் சேமித்து வைத்திருப்பதற்குமான நீள்வட்ட பாத்திரம் ஆகும். இது உலர்ந்த பூசணி அல்லது தேங்காய் ஓடு அல்லது செம்பு உலோகத்தினால் ஆனது. இதனை ஏந்தி செல்வதற்கு வசதியாக அரைக்கோள வடிவ கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். மேலும் கமண்டலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு செம்பு அல்லது மரத்தினால் மூக்கு போன்ற குழாய் பொருத்தப்பட்டிருக்கும்.
செம்பு உலோகம் உபயோகத்திற்கு வருவதற்கு முன்னர், புரச மரத்தின் பட்டைகளை உரித்து நீக்கிய மரத்தண்டில் செய்த கமலண்டலங்களை பயன்படுத்தினர் என்ற விவரம் குறுந்தொகை 156வது பாடலில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் கீழ்கண்டவாறு பாடியுள்ளார்.[1]
- செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
- தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்து
இங்கு முருக்கு என்பது புரச மரம் ஆகும்.
கமண்டலம் இந்து சமயத் துறவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும் சமணத் துறவிகளாலும், சில போதிசத்துவர்களின் சித்தரிப்புகளிலும் கமண்டலம் பயன்படுத்தப்படுகிறது.[2]
தயாரிக்கும் முறை
[தொகு]கமண்டலத்தை செப்பு உலோகம், களிமண், மரம் மற்றும் உலர்ந்த பூசணிக்காய், பரங்கிக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் செய்யலாம். கமண்டலம் செய்ய ஒரு பழுத்த பூசணிக்காயைப் பறித்து, உட்புற தசைப்பற்றுகள் மற்றும் விதைகள் நீக்கி சுத்தம் செய்யப்படுகிறது. பின் இதன் கெட்டியான வெளிப்புற ஓட்டைக் கொண்டு கமண்டலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது ஆன்மீகத்தில் ஒரு நபரிடமிருந்து அகங்காரம் நீக்குவதாக அறியப்படுகிறது. பழுத்த பூசணிக்காய் நபரைக் குறிக்கிறது, தசைப் பகுதிகள் மற்றும் விதைகள் அகங்காரம் ஆகும். இவ்வாறு சதை மற்றும் விதைகள் நீக்கி சுத்தம் செய்வது அகங்காராம் நீக்குவதைக் குறிக்கிறது. மேலும் தன்னை அறிய ஒரு குறியீடாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கமண்டலம்
- ↑ http://www.hindudharmaforums.com/archive/index.php?t-448.html பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம், Sanatana Dharma for Kids: Hindu Trinity: Brahma - Sarasvati
- ↑ Pandit, Bansi (2005). Explore Hinduism. Heart of Albion. p. 187. ISBN 9781872883816. Retrieved 2008-08-21. p.48