கப்லு அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கப்லு அரண்மனை (ஆங்கிலம்: Khaplu Palace ) ( உருது: خپلو محل) என்பது உள்நாட்டில் யாப்கோ கர் [1] அதாவது கூரையின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு பாக்கித்தானின் கில்கிட்-பால்டித்தான் பகுதியில் கப்லுவில் அமைந்துள்ள ஒரு பழைய கோட்டை மற்றும் அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ஒரு கட்டடக்கலை பாரம்பரியமாகவும், சுற்றுலா தலமாகவும் கருதப்படுகிறது. [2] இது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. இதற்கு அருகில் இருந்த முந்தைய கோட்டையை மாற்றியது. இது கப்லுவின் அரசரின் அரச இல்லமாக செயல்பட்டது.

2005 முதல் 2011 வரை அரண்மனை, முன்னர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்ததால், ஆகா கான் வரலாற்று நகரங்கள் திட்டத்தின் கீழ் கலாச்சாரத்திற்கான அகா கான் அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்திற்கு உட்பட்டது. இந்த அரண்மனையில் இப்போது செரீனா குழுமம் நடத்தும் ஒரு விடுதியும், பால்டித்தானின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சித்தரிக்கும் ஒரு அருங்காட்சியகமும் உள்ளன. [3]

இருப்பிடம்[தொகு]

பால்டித்தானின் கிழக்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மேலே 2,600 மீட்டர்கள் (8,500 ft) உயரத்தில் கப்லு நகரம் அமைந்துள்ளது. மேலும் இது காஞ்சே மாவட்டத்தின் நிர்வாக தலைநகரம் ஆகும். சிந்து நதியின் துணை நதியான சியோக் நதி நகரம் வழியாக செல்கிறது, அதனுடன் லடாக் செல்லும் பண்டைய வர்த்தக பாதையும் இதன் வழியே செல்கிறது. கப்லு அரண்மனை கப்லு நகரத்திற்கு வடக்கேயும், சியோக் ஆற்றின் தெற்கிலும் காரகோரம் வரம்பின் உயரமான மலைகளுக்கு முன்னால் அமைந்துள்ளது. [4] அரண்மனையின் பின்னால் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு மலையேற்றம் ஸ்கார்டு மாவட்டத்தில் உள்ள பரி கிராமத்திற்கு செல்கிறது.

சீரமைப்பு[தொகு]

பால்கிஸ்தானில் அகா கான் அறக்கட்டளை கலாச்சாரத்தால் புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது கோட்டை கப்லு அரண்மனை ஆகும். [5] புதுப்பித்தல் பணி 2005 இல் தொடங்கி 2011 இல் நிறைவடைந்தது. இந்த திட்டத்திற்கு நோர்வே வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகம் வழியாக நிதியளித்தது. யு.எஸ்.ஏ.ஐ.டி கோட்டையின் உள்ளே பால்டி கலாச்சாரத்திற்கான ஒரு கண்காட்சி மையத்திற்கு நிதியளிக்க உதவியது. கண்காட்சி மையம் தளத்தின் மூன்றில் இரண்டு பங்கினை கொண்டுள்ளது. [6] சமுதாயக் கட்டமைப்பிற்கான ஒரு முயற்சியாக 400 உள்ளூர் குடும்பங்களைச் சேர்ந்த பணியாரர்களின் உதவியுடன் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. [7] புதுப்பிக்க வேண்டிய தளத்தின் நிலப்பரப்பு அம்சங்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பு மின்னணு தூர அளவீட்டு (EDM) சாதனங்களைப் பயன்படுத்தி 2005 இல் தொடங்கப்பட்டது. அரண்மனையின் பல சிதைந்த பகுதிகளின் அசல் நிலையைக் கண்டறிய இந்த ஆய்வு உதவியது. [8] புதுப்பிப்பதற்கான வெனிஸ் சாசனத்தின் தரங்களைப் பின்பற்றி புதுப்பித்தல் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. [9] மறுசீரமைப்பிற்காக பெறப்பட்ட பொருள் முப்பது மில்லியன் ரூபாய் , தொழிலாளர்களின் ஊதியம் மொத்தம் இருபத்தைந்து மில்லியன் ரூபாய் ஆகும். [10]

விருதுகள்[தொகு]

விர்ஜின் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அரண்மனையின் மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் அப்பகுதியின் உள்ளூர் மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியதற்காக பாராட்டப்பட்டது. இந்த அரண்மனை 2012 இல் "வறுமை குறைப்பு" பிரிவில் சிறந்த திட்டமாக விர்ஜின் விடுமுறை பொறுப்பு சுற்றுலா விருதை வென்றது. [6] 2013 ஆம் ஆண்டில் அரண்மனைக்கு யுனெஸ்கோ ஆசியா பசிபிக் பாரம்பரிய விருதுகள், இந்தியாவில் லால் சிம்னி காம்பவுண்ட் மற்றும் ஆப்கானிஸ்தானில் தி கிரேட் செராய் ஆகியவற்றுடன் விருது வழங்கப்பட்டது.

தயார்-இ-தில் கப்லு என்ற புகழ்பெற்ற நாடகத் தொடர் இக்கோட்டையில் படமாக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Luxury with Heritage. http://www.danialshah.com/publ/luxury_with_heritage_danial_shah.pdf. பார்த்த நாள்: 12 September 2013. 
  2. Northern Areas: State of Environment and Development. http://cmsdata.iucn.org/downloads/nasoed.pdf. பார்த்த நாள்: 14 September 2013. 
  3. "How we save our past glories". The Nation. 9 September 2013. Archived from the original on 11 செப்டம்பர் 2013. https://web.archive.org/web/20130911213609/http://www.nationmultimedia.com/life/How-we-save-our-past-glories-30214356.html. பார்த்த நாள்: 11 September 2013. 
  4. "Residential castles (Khar) and mountain fortresses (Khardong) in Baltistan". Tibet Encyclopedia (in German). International Institute for Tibetan and Buddhist Studies. 14 September 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
  5. "Khaplu Fort, Baltistan". Pamir Times. 29 June 2011. 26 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 "Khaplu Palace wins international award". Dawn. 11 December 2012. 26 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Rescuing heritage: NGO gets tourism award for restoring 19th century palace in Baltistan". 16 November 2012. http://tribune.com.pk/story/466510/rescuing-heritage-ngogets-tourism-award-for-restoring-19th-century-palace-in-/. பார்த்த நாள்: 14 September 2013. 
  8. Adil, Balti (February 26, 2019). "Khaplu Ghanche | Must Visit Places in Khaplu Ghanche Baltistan". MySkardu.com. Islamabad, Pakistan. 28 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 March 2019 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  9. "Khaplu Palace a genuine heritage of Baltistan". 24 December 2012. Archived from the original on 14 செப்டம்பர் 2013. https://archive.is/20130914211618/http://thepeninsulaqatar.com/pakistanafghanistan/219242-khaplu-palace-a-genuine-heritage-of-baltistan-.html. பார்த்த நாள்: 14 September 2013. 
  10. "Resurrecting an old Raja's palace". 28 July 2013. http://tribune.com.pk/story/580833/resurrecting-an-old-rajas-palace/. பார்த்த நாள்: 14 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்லு_அரண்மனை&oldid=3271447" இருந்து மீள்விக்கப்பட்டது