கப்ரு
| ஆதரவளிப்போர் | அணு சக்தித்துறை (இந்தியா), இந்தியா |
|---|---|
| இடம் | கணித அறிவியல் நிறுவனம், தரமணி, சென்னை |
| கட்டமைப்பு | பெண்டியம் 4 சியான் 2.4ஜிகாஹெர்ட்சு, 288cores |
| வேகம் | 1,002 GFlops |
| தரப்படுத்தல் | முதல்500: 264, சூன் 2004 |
கப்ரு என்பது 2.4 ஜிகா கெர்ட்சு மீத்திறன் கணினி ஆகும். இது பென்டியம் ஜியோன் தொகுப்பு லினக்ஸ் 959 மிதப்புப் புள்ளிச் செயல்பாட்டின் மூலம் நிலையான வேகத்தை பெருகின்றது. இது இந்தியாவின் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. சூன் 2004-இல், உலகின் மிக சக்திவாய்ந்த கணினிகளின் முதல் 500 பட்டியலில் கப்ரு 264ஆவது இடத்தைப் பிடித்தது.[1] கப்ரு எனும் இந்தப் பெயரானது இமயமலையின் ஓரு சிகரத்தின் பெயராகும்.
கப்ரு மீத்திறன் கணினியினை நிறுவும் யோசனையானது, கணினி அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் அரி தாசு தனது தத்துவார்த்த இயற்பியல் ஆராய்ச்சியைக் கையாள ஒரு மீத்திறன் கணினியின் தேவையினைத் தேடத் தொடங்கியபோது பிறந்தது. இது முதன்மையாக லேட்டிசு கேஜ் கோட்பாட்டின் துறையில் பெரிய அளவிலான உருவகப்படுத்துதல்களைக் கையாண்டுள்ளது.
இந்திய அணுசக்தித் துறை, கப்ருவை மேம்படுத்துவதற்காக இந்நிறுவனத்திற்கு ரூ.3.5 கோடி மானியம் வழங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TOP500 List - June 2004". TOP500. Archived from the original on 18 December 2018. Retrieved 18 December 2018.