கப்பூது காட்டுக்கந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கப்பூது காட்டுக்கந்தன் இலங்கைத்தீவின் வட முனையில் அமைந்துள்ள கப்பூது என்னும் பழம்பெரும் சிற்றூரில் அமைந்தூள்ள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். கப்பூது வடமராட்சி-தென்மராட்சிகளின் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது. (இதன் அயற் கிராமங்களாக சரசாலை, வாதரவத்தை அமைந்துள்ளன).

வரலாறு[தொகு]

இந்த கப்பூது முருகன் ஆலயவரலாறானது போத்துக்கீயர், ஒல்லாந்தர்களின் படையெடுப்புக்கு முன்பில் தோன்றியதற்கான வரலாற்றுச்சான்றுகள் முன்னோர்களால் செவிவழியாக சொல்லப்பட்டு இன்று வரை பேணிவரப்படுகின்றது. ஆரம்பகாலம் 1800ம் ஆண்டாகவும் அன்றிலிருந்து அன்னியர்களால் இடித்து மறைக்கப்படும் வரை அக்கால மக்களால் பெரிதும் பூசிக்கப்பட்டு பூஜைகள் நிகழப்பெற்றுவந்துள்ளது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் காலத்தில் அவ்வூர் மெய்யடியார் ஒருவர் கனவில் தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள குளத்தில் முருகன் ஆலயமொன்றை ஒல்லாந்தர்கள் இடித்து விக்கிரகங்களை மறைப்பதாக கண்டதாக தன் ஊர்மக்களிடம் கூறினார். கனவின் வெளிப்பாடாக அவ்வூர் மக்கள் உதவியுடன் குளத்தை அகழ்ந்து பார்க்கும்போதே கனவில் சொல்லப்பட்ட விக்கிரகங்கள் காணப்பட்டதானது அற்புத நிகழ்வாக இன்றும் போற்றப்படுகின்றது[1]

இன்றைய நிலை[தொகு]

அன்றைய மெய்யடியார்களினால் சிறிதாக பக்தி சிரத்தையுடன் அழகுற ஆரம்பிக்கப்பட்ட முருகன் ஆலயமானது நாளடைவில் பக்தர்களின் அயராத முயற்சியினால் 1914ம் ஆண்டு கற்களால் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் கால ஓட்டத்தில் இவ்வாலயம் 1926, 1938ம் ஆண்டுகளில் புனருத்தாரனப்பணிகள் செய்யப்பட்டு கும்பாவிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அன்று தொட்டு வைகாசி மாத அமாவாசையை அடுத்து சதுர்த்தியில் உற்சவம் ஆரம்பமாகி பூரணையில் தீர்த்தமுடன் நிறைவாவது வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து 1959இல் மீள் புனருத்தானமுடன் கும்பாவிஷேகமும், 1976 ஆம் ஆண்டு பாலஸ்தானமும் செய்யப்பட்டது. மேலும் 1980களில் மிகவும் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்ட திருப்பணியாக ஆரம்பித்து (இரு கேணிகள், அன்னதானமடம், அம்பாள் ஆலயம், வைரவர் ஆலயத்துடன்) 1989 ம் ஆண்டு மகாகும்பாபிஷேகத்துடன் நிறைவுகண்டது. ஆலயத்திற்கு மேலும் மெருகூட்டும் விதமாக சித்திரத்தேர் சிறப்புற பெரும் பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. இந்த ஆலயத்தின் தோற்றம் பற்றி ஆரம்ப காலம் முதலே மிகுந்த ஈடுபாடுள்ளவரும் தர்மகத்தாக்களில் முக்கியவருமான திரு.சபாபதிப்பிள்ளை தாமோதரம்பிளை அவர்கள் தன் அனுபவங்களுடன் கூறிய விடயங்கள் கட்டுரையாக வீரகேசரி பத்திரிகையின் 5.6.2000 பதிப்பில் வெளியாகியிருந்தது.