கப்புள் ஸ்ட்ரீட்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

கப்புள் ஸ்ட்ரீட் என்பது கணவன், மனைவி எனும் வாழ்விணையர்களுக்கிடையிலான தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சமூக இணையதளமாகும். முகநூல் தளத்திலுள்ள அரட்டை போன்ற சில வசதிகளைக் கொண்டிருக்கிற இந்த இணையதளத்தை இருவருக்கிடையிலான தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இங்கு நாட்காட்டி எனும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நாட்காட்டியில் முக்கியமான நாட்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இது போன்று வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இங்கு செலவுகளைக் குறித்து வைப்பதற்கான தனிப்பக்கமும் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் குடும்பச் செலவுகளையும் திட்டமிட்டுக் கொள்ள முடியும். மேலும் சில வசதிகளும் இங்கு தரப்பட்டிருக்கின்றன.

வெளி இணைப்புகள்[edit]