கப்பிட்டல் கோபுரம், சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 1°16′39″N 103°50′51″E / 1.27750°N 103.84750°E / 1.27750; 103.84750

கப்பிட்டல் கோபுரம்
Capital Tower, Jan 06.JPG


தகவல்
அமைவிடம் ராபின்சன் சாலை, நகர மையம், சிங்கப்பூர்
நிலை Completed
பயன்பாடு அலுவலகம், சில்லறை வணிகம்l
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 52
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் ஆர்.எஸ்.பி கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடலாளர்கள் மற்றும் பொறியாளர்கள்
ஒப்பந்தகாரர் சசாங்யொங் குழுமம்
Developer கப்பிட்டல்லாண்ட்
உரிமையாளர் CapitaCommercial Trust
முகாமை கப்பிட்டல்லாண்ட்

கப்பிட்டல் கோபுரம், சிங்கப்பூர் நகரத்தில் உள்ள நான்காவது உயரமான வானளாவி ஆகும். இது 254 மீட்டர் உயரமானது. தொடக்கத்தில், பி.ஓ.எஸ் வங்கியின் தலைமையகமாக வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடம் பின்னர் "கப்பிட்டல்லாண்ட்" நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது. இது அந் நிறுவனத்தின் முக்கியமான கட்டிடமாக மாறியதுடன் அந் நிறுவனத்தின் பெயரே கட்டிடத்துக்கும் இடப்பட்டது. 2000 ஆவது ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இக் கட்டிடம் இது அமைந்துள்ள சென்ட்டன் வே-தஞ்சோங் பாகர் பகுதியில் மிக உயர்ர்ந்த கட்டிடமாகவும் விளங்குகிறது.

52 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடத்தில் இரட்டைத் தளங்கள் கொண்ட ஐந்து உயர்த்திகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வுயர்த்திகள் ஒவ்வொன்றும் 3,540 கிகி எடையுடன், 10மீ/செக் வேகத்தில் செல்லவல்லது.

சிங்கப்பூர் அரசின் முதலீட்டுநிறுவனமும் இந்தக் கட்டிடத்திலேயே உள்ளது. கட்டிடத்தின் கடைசித் தளத்தை "சைனா கிளப்" என்னும் ஒரு கழகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கே ஒரு மதுச்சாலை, உணவகம், கூட்ட மண்டபங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன.