கப்பல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கப்பல் (Kappal ) என்பது 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குநரான கார்த்திக் ஜி கிரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. வைபவ் மற்றும் சோனம் பஜ்வா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். அர்ஜுனன் மற்றும் கருணாகரன் ஆகியோர் துணைக்கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இந்தத் திரைப்படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் டிசம்பர் 25, 2014 இல் வெளியிட்டது.[1] பண்டவலு ஒக்கடு எனும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[2]

கதைச் சுருக்கம்[தொகு]

இந்தத் திரைப்படத்தின் கதையானது வாசு (வைபவ்) தனது சிறுவயது நிகழ்வுகளைக் கூறுவதில் இருந்து துவங்குகிறது. இவருக்கு, கருணாகரன், அர்ஜுனன், வென்கட் சுந்தர், கார்த்திக் பிரியதர்ஷன் ஆகிய நான்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு. இவர்கள் நான்கு பேரும் அந்த ஊரில் உள்ள சீனு என்பவரை கதாநாயகன் போல அவரை நினைக்கின்றனர். அவர் இவர்களிடம் திருமணம் , நட்பினைக் கெடுத்துவிடும் என்று கூறுகிறார். அதனால் இவர்கள் ஐவரும் இனிமேல் திருமணம் செய்வதில்லை என சத்தியம் செய்கின்றனர். இவரின் நண்பர்கள் இவரை அகனன் எனும் வதந்திகளைப் பரப்பியதனால் வாசுவின் பல காதல்கள் தோல்வியில் முடிவடைகிறது. அதனால் வாசு சென்னை சென்று அங்கு நெல்சன் ( விடிவி கணேஷ்) வீட்டில் தங்குகிறார். ஒருநாள் குடிக்கூடகத்தில் தீபிகாவை (சோனம் பஜ்வா) சந்திக்கிறார். பார்த்ததும் காதலில் விழுகிறார். தீபிகாவின் நண்பர் அதிகமாக மது அருந்தியதால் தீபிகாவிற்கு வாசு உதவி செய்கிறார். மறுநாள் தீபிகாவைப் பார்க்க அவருடைய வீட்டிற்குச் சென்று தனது காதலைக் கூறுகிறார். சில நாள்களுக்குப் பிறகு தீபிகாவும் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்கிறார். இவர்களின் காதல் பற்றித் தெரிந்து வாசுவின் நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். வாசுவிற்கு பல இடையூறுகள் கொடுக்கின்றனர். பின் அவர்களின் உண்மையான காதலை உணர்ந்து தீபிகாவின் நிச்சயிக்கப்பட்டத் திருமணத்தை நிறுத்தி இவர்களுக்கு எவ்வாறு திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்பதனை நகைச்சுவை கலந்து படத்தில் காட்டியுள்ளனர்.

தயாரிப்பு[தொகு]

கார்த்திக் கிருஷ்[3] இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை ஷங்கரின் எந்திரன் (திரைப்படத்தில்) உதவி இயக்குனராகப் பணிபுரிந்தபோது எழுதினார். வைபவை கதாநாயகனாகத் தேர்வு செய்வதற்கு முன்பாக ஜெய் அல்லது சிவகார்த்திகேயனை நாயகனாக நியமிக்கலாம் என இயக்குநர் நினைத்தார்.[4] மார்ச் 2013 இல் படப்பிடிப்பு துவங்கியது. இதன் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் நடத்தப்பட்டது. முதலில் அஷ்ரிதா செட்டி தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். பின்பு அந்தக் கதாப்பாத்திரத்திற்கு சோனம் பஜ்வா தேர்வானார்[5]. சந்தோஷ் நாராயணனிற்குப் பதிலாக நடராஜன் சங்கரன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்[6]. இருந்தபோதிலும் ஒரு பாடலைப் பாட சந்தோஷ் நாராயணன் சம்மதம் தெரிவித்தார்.[7]

கதை மாந்தர்கள்[தொகு]

  • வைபவ் (வாசு)
  • சோனம் பஜ்வா (தீபிகா)
  • கருணாகரன் (கணக சபாபதி)
  • வி டி வி கணேஷ் (நெல்சன்)
  • அர்ஜுனன் (கல்யான சுந்தரம்)
  • வெங்கட் சுந்தர் (பட்டாபி)

ஒலி வரி[தொகு]

திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தவர் நடராஜன் சங்கரன் ஆவார். மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று 1989 ஆம் ஆண்டில் இளையராஜா இசையமைத்த கரகாட்டக்காரன் எனும் திரைப்படத்தில் வந்த ஊரு விட்டு ஊரு வந்து எனும் பாடலை மறுகலப்பு செய்திருந்தனர்.[8] இந்தத் திரைப்படத்தின் ஒலிவரியானது நவம்பர் 22, 2014 இல் வெளியிடப்பட்டது.[9]

Kappal (Original Motion Picture Soundtrack)
# பாடல்வரிகள்Singer(s) நீளம்
1. "ஒரு கப் ஆசிட்"  மதன் கார்க்கிதீபக் 04:06
2. "காதல் கசாட்டா"  மதன் கார்க்கிசத்யபிரகாஷ், சைந்தவி 04:11
3. "எக்கச்சக்கமாய்"  கபிலன்அல்போன்சு ஜோசப், அன்கிதா மேத்யூ 04:13
4. "ஃபிரண்சிப்"  கபிலன்அந்தோணி தாசன் 03:31
5. "காலிப் பசஙக"  கார்த்திக் கிருஷ்சந்தோஷ் நாராயணன் 03:22
6. "இளையராஜாவின் ஊரு விட்டு ஊரு வந்து"  கங்கை அமரன்ஸ்ரீராம் பார்த்தசாரதி 02:55
மொத்த நீளம்:
21:26

சான்றுகள்[தொகு]

  1. "Christmas releases censored and confirmed". Sify. Archived from the original on 2014-12-17. பார்க்கப்பட்ட நாள் 2018-03-29.
  2. http://www.123telugu.com/reviews/pandavullo-okadu-telugu-movie-review.html
  3. "Kappal". tamilimdb.com. Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-03-29.
  4. Surendhar MK. "How Vaibhav replaced Sivakarthikeyan". Only Kollywood.
  5. "Vaibhav's Kappal sails in the night!". The Times of India.
  6. "Shankar's assistant brings us colorful 'Kappal'". Tamil Cinema News — Movie Reviews — Gossips.
  7. "Santhosh Narayanan Sings For Kappal". Silverscreen.in.
  8. "Ilayaraja sends legal notice on copyright to director Shankar". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
  9. "Kappal audio launched". The Times of India.

வெளியினைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கப்பல் (திரைப்படம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கப்பல்_(திரைப்படம்)&oldid=3659728" இலிருந்து மீள்விக்கப்பட்டது