கப்பல் பூனை


கப்பல் பூனை (Ship's cat) என்பது பொதுவாக கப்பலில் வளர்க்கப்படும் பூனையைக் குறிப்பதாகும். பண்டைய காலங்களிலிருந்தே வணிகம், ஆய்வு, கடற்படைக் கப்பல் போன்றவற்றில் பூனைகள் பொதுவாக வளர்க்கப்பட்டு வருகின்றன. பல காரணங்களுக்காக பூனைகள் கப்பல்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன, மிக முக்கியமாக எலிகள் போன்ற கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்த பூனைகள் கப்பலில் வளர்க்கப்பட்டன. கப்பலில் உள்ள பூச்சிகள் கயிறுகள், மரவேலைப்பாடுகள், அண்மையில் மின் இணைப்புகள் ஆகியவற்றை சேதப்படுத்துபவையக உள்ளன. கூடுதலாக, எலி போன்றவை கப்பல் பணியாளர்களின் உணவுப் பொருட்களையும், தானியங்கள் போன்ற கப்பலில் உள்ள சரக்குகளுக்குகளையும் சேதப்படுத்தி பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளும் நோய்க்கான ஒரு மூலமாகும், இது நீண்ட காலத்திற்கு கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஆபத்தானது. எலி ஈக்கள் கொள்ளைநோயைப் பரப்பக்கூடியன. மேலும் கப்பல்களில் உள்ள எலிகள் [a] கறுப்புச் சாவின் முதன்மை நோய்க்காவி என்று நம்பப்படுகிறது. [2]
பூனைகள் இயற்கையாகவே எலி போன்ற கொறித்துண்ணிகளைத் தாக்கி கொன்றுவிடுகின்றன [3]. மேலும் புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. இது அவற்றை கப்பலில் சேவை செய்ய ஏற்றதாக ஆக்குகிறன்றது. கூடுதலாக, அவை வீட்டை விட்டு பிரிந்து இருக்கும் மாலுமிகளுக்கு தோழமை உணர்வைத் தருகின்றன.
வரலாறு
[தொகு]ஆப்பிரிக்க காட்டுப்பூனை முதன்முதலில் வளமான பிறை பிரதேசத்தில் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய முதல் விவசாயப் புரட்சியின் போது வளர்ப்பு விலங்காக ஆக்கபட்டிருக்கலாம். [4] மத்தியதரைக் கடல் தீவுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறிய பூனை எலும்புகள், முதல் மில்லினியத்தின் தொடக்கத்தில் பூனைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிக்கின்றன.[5] தொல்லியல் பூனை மாதிரிகள் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி பகுப்பாய்வின் படி, பண்டைய எகிப்திய பூனைகள் கிமு 8 ஆம் நூற்றாண்டில் மத்தியதரைக் கடல் வர்த்தகப் பாதைகளில் பரவத் தொடங்கி, கிபி 7 ஆம் நூற்றாண்டில் பால்டிக் கடலில் உள்ள ஒரு வைக்கிங் துறைமுகத்தை அடைந்தன என்பதைக் காட்டுகின்றன. [6] வைக்கிங் மாலுமிகள் தங்கள் பயணங்களில் பூனைகளை தங்களுடன் அழைத்துச் சென்றதாக ஆய்வுகள் கூறுகிறன. [7] 15 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான கண்டுபிடிப்பு காலத்தில், ஆய்வாளர்களும், வணிகர்களும் அவற்றை தங்கள் கப்பல்களில் உலகின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். [8]
1975 ஆம் ஆண்டு அரச கடற்படை, சுகாதார காரணங்களுக்காக கடலில் உள்ள அனைத்து கப்பல்களிலிருந்தும் பூனைகள் மற்றும் பிற செல்லப்பிராணிகளை வளர்க்கத் தடை செய்தது. [9] இருப்பினும், பல தனியார் கப்பல்களில் பூனைகள் இன்னும் பொதுவக வளர்க்கப்படுகின்றன. கேப்டன் கேட் மெக்யூவின் ஸ்பிங்க்ஸ் பூனை, 2024 திசம்பரில் அது இறக்கும் வரை செலிபிரிட்டி பியாண்ட் என்ற பெரும் பயணக் கப்பலில் அவருடன் பயணம் செய்தது. [10]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]அடிக்குறிப்புகள்
மூலங்கள்
- ↑ Greshko, Michael (15 January 2018). "Maybe Rats Aren't to Blame for the Black Death". National Geographic News. Archived from the original on 30 September 2019. Retrieved 19 October 2020.
- ↑ "The Black Death". John Martin Rare Book Room. Hardin Library for the Health Sciences. Retrieved 19 October 2020.
- ↑ Bruzelius, Lars (2005). "Sailing Ships". Stevens: 'Vermin', 1894. The Maritime History Virtual Archives. Archived from the original on 4 November 2020. Retrieved 20 April 2010.
- ↑ Driscoll, C. A.; Menotti-Raymond, M.; Roca, A. L.; Hupe, K.; Johnson, W. E.; Geffen, E.; Harley, E. H.; Delibes, M. et al. (2007). "The Near Eastern Origin of Cat Domestication". Science 317 (5837): 519–523. doi:10.1126/science.1139518. பப்மெட்:17600185. Bibcode: 2007Sci...317..519D.
- ↑ Vigne, J.-D. (1992). "Zooarchaeology and the biogeographical history of the mammals of Corsica and Sardinia since the last Ice Age". Mammal Review 22 (2): 87–96. doi:10.1111/j.1365-2907.1992.tb00124.x. Bibcode: 1992MamRv..22...87V. https://www.academia.edu/download/46314275/Zooarchaeology_and_the_Biogeographical_h20160607-30777-1e6lk2e.pdf.
- ↑ Ottoni, C.; Van Neer, W.; De Cupere, B.; Daligault, J.; Guimaraes, S.; Peters, J.; Spassov, N.; Prendergast, M. E. et al. (2017). "The palaeogenetics of cat dispersal in the ancient world". Nature Ecology & Evolution 1 (7): 0139. doi:10.1038/s41559-017-0139. Article no. 0139. Bibcode: 2017NatEE...1..139O. https://research.rug.nl/en/publications/04942e78-fa48-4700-ad97-29fcdf9077a1.
- ↑ Persson, C. P. (2016). "Viking sailors took their cats with them". Science Nordic (in நார்வேஜியன்). Retrieved 4 February 2021.
- ↑ Mason, I. L., ed. (1984). Evolution of Domesticated Animals. London: Longman. p. 223. ISBN 0582460468.
- ↑ "Famous ships cats and their lives". Purr-n-Fur – Famous Felines.
- ↑ Santillan, A. "Captain Kate's Seafaring Cat, Bug Naked, Passes Away After Dental Procedure". Cruise Radio. Retrieved 31 Dec 2024.
- Lewis, Val (2001). Ships' Cats in War and Peace. Nauticalia. ISBN 9780953045815.
- Roberts, Patrick. "Simon, of HMS Amethyst". Purr-n-Fur – Famous Felines. Retrieved September 22, 2023.
