கபீர் ஜெயந்தி
| கபீர் ஜெயந்தி | |
|---|---|
| கடைப்பிடிப்போர் | கபீரைப் பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படுகிறது |
| வகை | மதம் சார்ந்த (1–2 நாட்கள்), கலாச்சார |
| முக்கியத்துவம் | கபீரின் பிறந்தநாள் கொண்டாட்டம் |
| கொண்டாட்டங்கள் | பக்தர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, புனித கபீர் தாசு எழுதிய கவிதைகளைப் பாராயணம் செய்கிறார்கள். |
| நாள் | பூர்ணிமா திதி (பௌர்ணமி) |
| நிகழ்வு | ஆண்டு |
கபீர் ஜெயந்தி (Kabir Jayanti),என்பது கபீர் பிரகாத் திவாசு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற கவிஞரும் ஞானியுமான கபீரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.[1] இது ஆண்டுக்கு ஒருமுறை இந்து மாதமான ஆனியில் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியின்படி மே அல்லது சூன் மாதமாகும்.[2] கபீா் பிறந்த ஆண்டும் ஈ இறந்த ஆண்டும் சாியாகத் தொியவில்லை. கபீர் ஜெயந்தி 2021 இல் சூன் 24 அன்றும், 2022 இல் சூன் 14 அன்றும், 2023 இல் சூன் 4 அன்றும் கொண்டாடப்பட்டது.
முக்கியத்துவம்
[தொகு]கபீர் ஜெயந்தி, கி.பி. 1398-ல் இந்து நாட்காட்டியின்படி ஆனி மாதத்தின் பௌர்ணமி நாளில் கபீர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அவர் பூமியில் எப்படித் தோன்றினார் என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது. கபீர் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் தெளிவாகத் தெரியவில்லை.[3][4]:14 சில வரலாற்றாளர்கள் அவர் வாழ்ந்த காலம் 1398–1448 எனக் குறிப்பிடுகின்றனர்.[5][4]:5 ஆனால் வேறுசிலர் 1440–1518 எனக் கருதுகின்றனர்.[4]:106[6]
அவரது பிறப்பு மற்றும் அவரது பிறந்த குடும்பம் குறித்த பலவிதமான கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றுள் ஒன்றில், கபீரின் தாய் வாரணாசியைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் எனவும், வழக்கமான முறையின்றி கருத்தரித்து, உள்ளங்கை வழியே கபீரைப் பெற்றடுத்துப் பின்னர் அவரை ஒரு கூடையில் வைத்து குளத்தில் விட்டுவிட்டார் எனவும், அக்குழந்தையை ஒரு இசுலாமியர் எடுத்து வளர்த்தார் எனவும் கூறப்படுகிறது.[1][5]:5[5]:4–5 ஆனால் தற்கால அறிஞர்கள் இக்கதைகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையெனக் கூறி அவற்றை நிராகரிக்கின்றனர். கபீர் ஒரு நெசவாள, இசுலாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராகத்தான் பரவலாகக் கருதப்படுகிறது.[5]:3–5 வெண்டி டோனிகர் என்ற இந்தியவியலாளர் கபீர் இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், இக்கதைகள் அவரை இசுலாமியத்திலிருந்து இந்து சமயத்திற்கு இழுப்பதாகவும் கருதுகிறார்.[7] மற்றவர்களோ அவர் லகர்தாரா ஏரியில் ஒரு தாமரை மலரில் தோன்றினார் என்று வலியுறுத்துகின்றனர். உண்மையில், லகர்தாரா ஏரியில் இன்றும் ஒரு கபீர்பந்த் உள்ளது. இது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.[8]
புராணக்கதை
[தொகு]1398 ஆம் ஆண்டில் (சம்வத் 1455), பிரம்மமுகூர்த்த காலத்தில் ஆனி மாதத்தின் பௌர்ணமி நாளில் கபீர் ஒரு தாமரை மலரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[9] கபீர் சத்தியத்தன் உலகத்திலிருந்து ஒளி உடலை ஏற்று வந்து தாமரை மலரில் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.[10] முனிவா் அசுடானந்தர் இந்த சம்பவத்திற்கு நேரடி சாட்சியாக இருந்தார்.
கொண்டாட்டம்
[தொகு]இந்த ஆண்டுவிழா இந்தியாவில் ஒரு சிறப்பு ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.[11] இது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.[12]

இந்த நாளில், அவரது சீடர்கள் அவரது போதனைகளை நினைவுகூர்ந்து, அவரது கவிதைகளை ஒன்றாகப் படிக்கின்றனர்.[13][14] இந்தியா முழுவதும் பல கபீர்பந்திகளால் பல பண்டாராக்களும் நடத்தப்படுகின்றன. கபீர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார், எனவே இந்த நாளில் அவரது சீடர்களால் பல சமூகப் பணிகளும் செய்யப்படுகின்றன. கபீர் ஜெயந்தி 2020 இல் சூன் 5 அன்று கொண்டாடப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் தேதி சூன் 24 ல் கொண்டாடப்பட்டது.[15]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 ((The Editors of Encyclopaedia Britannica)) (2022). "Kabir". Encyclopedia Britannica.
- ↑ "कबीर जयंती पर इन Wishes Images और Quotes के जरिए दोस्तों को दें शुभकामना" (in hi). Jansatta. 17 June 2019. https://www.jansatta.com/religion/saint-kabir-jayanti-2019-wishes-images-quotes-and-kabir-ke-dohe/1054905/. பார்த்த நாள்: 27 May 2020.
- ↑ Lorenzen, David (1991). Kabir Legends and Ananta-Das's Kabir Parachai. SUNY Press. pp. 12–18. ISBN 978-1-4384-1127-9.
- 1 2 3 Dass, Nirmal (1991). Songs of Kabir from the Adi Granth. Albany, NY: State University of New York Press. ISBN 0791405605.
- 1 2 3 4 Hess, Linda; Shukdev Singh (2002). The Bijak of Kabir. Oxford University Press. ISBN 978-8120802162.
- ↑ Lorenzen, David N. (2006). Who invented Hinduism?: essays on religion in history. New Dehli: Yoda Press. ISBN 8190227262.
- ↑ வெண்டி டோனிகர், The Hindus: An Alternative History, Oxford University Press (2010), p. 462
- ↑ "Sant Guru Kabir Jayanti: Here are 4 inspiring verses of Kabir Das". India Today (in ஆங்கிலம்). June 17, 2019. Retrieved 2020-05-31.
- ↑ "Kabir Saheb Prakat (Appearance) Diwas – The 24 Nation" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-05-24. Retrieved 2021-06-29.
- ↑ Cañcarīka, Kanhaiyā Lāla (1999). Mahatma Kabir (in இந்தி). Yūnivarsiṭī Pablikeśana. ISBN 978-81-7555-047-6.
- ↑ Bhaskar, Dainik (2019-06-17). "देशभर में मनाई गई कबीर जयंती, जानें क्या कहते थे कबीर". दैनिक भास्कर हिंदी (in hindi). Retrieved 2020-05-27.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Prime Minister Modi gets history wrong again, this time in Maghar". India Today (in ஆங்கிலம்). June 28, 2018. Retrieved 2020-05-28.
- ↑ "कबीर के ऐसे दोहे जो हमें जिंदगी का फलसफा सिखाते हैं..." aajtak.intoday.in (in இந்தி). Retrieved 2020-05-27.
- ↑ "सादगी के साथ मनाया गया संत कबीर का प्रकट दिवस". Hindustan (in hindi). Retrieved 2021-06-29.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Saint Kabir Jayanti 2019 Wishes Images, Quotes: कबीर के ये दोहे देते हैं जीवन हमेशा अच्छा करने का संदेश, ऐसे दें अपनों को शुभकामना". Jansatta (in இந்தி). 2019-06-17. Retrieved 2020-06-03.