உள்ளடக்கத்துக்குச் செல்

கபில நிற நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபில நிற நெட்டைக்காலி
ஆ. கே. கிரிசெசு இந்தியாவில் குளிர்காலத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. கேம்பெசுட்ரிசு
இருசொற் பெயரீடு
ஆந்தசு கேம்பெசுட்ரிசு
(லின்னேயஸ், 1758)
ஆந்தசு கேம்பெசுட்ரிசு பரம்பல்      இனப்பெருக்கம்      பயணப்பாதை      சாதாரண காலத்தில்
வேறு பெயர்கள்
  • அலாவுதா கேம்பெனிசுரிசு லின்னேயஸ், 1758
ஆந்தசு கேம்பெசுட்ரிசு முட்டை

கபில நிற நெட்டைக்காலி (Tawny pipit)(ஆந்தசு கேம்பெசுட்ரிசு) என்பது ஒரு நடுத்தர-பெரிய குருவி சிற்றினம் ஆகும். இது வடமேற்கு ஆபிரிக்கா மற்றும் போர்த்துகல் முதல் மத்திய சைபீரியா மற்றும் மங்கோலியா உட்பகுதிகள் வரையிலும் மத்திய பலேர்க்டிக்கின் பெரும்பகுதியிலும் இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். இது குளிர்காலத்தில் வெப்பமண்டல ஆப்பிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வலசை செல்கிறது. இதனுடைய விலங்கியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. ஆந்தசு என்பது புல்வெளிகளில் காணப்படும் சிறிய பறவையினைக் குறிக்கும் பெயர் ஆகும். மேலும் சிற்றினப் பெயரான கேம்பெசுட்ரிசு என்பது "வயல்களில்" என்று பொருள்.

இது ஒரு பெரிய நெட்டைக்காலி ஆகும். இதனுடைய உடல் நீளம் 16 சென்டிமீட்டர்கள் (6.3 அங்) இறக்கை விட்டம் 25–28 சென்டிமீட்டர்கள் (9.8–11.0 அங்) ஆகும்.[2] இது நிலத்தில் காணப்படும் வேறுபடுத்தி அறிய இயலா பறவையாக காணப்படும். இதன் மேற்பகுதி மணல் பழுப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி வெளிர் நிறத்திலும் காணப்படும். இது ரிச்சர்டு நெட்டைக்காலியினைப் போலவே காணப்படும். ஆனால் சற்று சிறியது, குறுகிய இறக்கை, வால் மற்றும் கால்களுடன் குறுகிய கருமையான அலகுடன் காணப்படும். இதன் நன்றாகப் பறக்கக்கூடியது.

இதன் பாடல் உரத்த ஒலியுடன் சிர்-ரீ-சிர்-ரீ என ஒலிக்கும்.[2]

தெற்காசியாவில், குளிர்காலத்தில், ரிச்சர்ட்டு நெட்டைக்காலி, பிளைத் நெட்டைக்காலி மற்றும் நெல்வயல் நெட்டைக்காலி வேறுபடுத்தியதாவதில் கவனமாக இருக்கவேண்டும். கபில நிற நெட்டைக்காலி இதன் உறவினர்களைப் போலவே பூச்சிகளை உண்ணக்கூடியது.

இனப்பெருக்க வாழ்விடம் பகுதி வறண்ட பாலைவனங்கள் உட்பட வறண்ட திறந்த இடங்களாகும். தரையில் கட்டப்படும் கூடுகளில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடுகின்றன.

சமூகத்தில்

[தொகு]

1944ஆம் ஆண்டு வெளியான டாவ்னி பிபிட் திரைப்படத்தின் கதைக்களம், இங்கிலாந்தில் ஒரு இணை கபில நிற நெட்டைக்காலி இனப்பெருக்கம் செய்யும் அரிய நிகழ்வைப் பற்றியது.[3] எரிக் ஹோஸ்கிங்கின் நெட்டைக்காலிகளின் காட்சிகள் உண்மையில் புல்வெளி நெட்டைக்காலிகளைப் பற்றியது. ஏனெனில் ஜெர்மனியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவிலிருந்து உண்மையான கபில நிற நெட்டைக்காலிகளை அவரால் பெற முடியவில்லை.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Anthus campestris". IUCN Red List of Threatened Species 2018: e.T22718501A131883347. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718501A131883347.en. https://www.iucnredlist.org/species/22718501/131883347. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 David William Snow, ed. (1997). The Birds of the Western Palearctic [Abridged]. OUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.David William Snow; Christopher Perrins, eds. (1997).
  3. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கபில நிற நெட்டைக்காலி
  4. Moss, Stephen. "Brits and their birds". BBC Wildlife Magazine. பார்க்கப்பட்ட நாள் 9 December 2010.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில_நிற_நெட்டைக்காலி&oldid=3594253" இலிருந்து மீள்விக்கப்பட்டது