உள்ளடக்கத்துக்குச் செல்

கபிசா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌதம புத்தர் சிலை, பாண்டுகிஸ்தான் மடாலயம்[1]

கபிசா இராச்சியம், தற்கால ஆப்கானித்தான் பகுதியில் கிபி 1000ஆம் ஆண்டு முதல் இருந்ததாக சீனாவின் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.[2] இதன் தலைநகரம் கபிசா நகரம் ஆகும். கபிசா இராச்சியத்தின் வடக்கில் இந்து குஷ் முதல் தெற்கிலும் மேற்கிலும் பாமியான் மற்றும் காந்தகார் வரையிலும், கிழக்கில் நவீன ஜலாலாபாத் வரையிலும் பரவியிருந்தது. தற்போது கபிசா இராச்சியத்தின் பகுதிகள் கபிசா மாகாணம் எனப்பெயரிடப்பட்டுள்ளது.[3]

வரலாற்றுக்கு முந்தைய காலத்திருந்து சமசுகிருத மொழியில் இந்த இராச்சியத்தை கபிசா என்றே குறித்துள்ளது.[4] கிமு 329ல் கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் படையெடுத்து பாக்ராம் (கபிசா) மற்றும் அதனைச் சுற்றியப் பகுதிகளைக் கைப்பற்றினார். பின் எலனியக் காலத்தில் கபிசா எனும் பக்ரம் மற்றும் இந்துகுஷ் பகுதிகளுக்கு காக்கேசியா அலெக்சாந்திரியா எனப்பெயரிடப்பட்டது.

கிபி 640ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த பௌத்த [பிக்கு யுவான் சுவாங், கபிசா இராச்சியத்திற்கு வருகை புரிந்தார். கபிசா குறித்த அவர்தம் குறிப்புகளில், கபிசா இராச்சியத்தில் நெல், கோதுமை பயிரிட்டதாகவும், சுலி பழங்குடியின அரசாண்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் கபிசாவில் 6,000க்கும் மேற்பட்ட மகாயாண பௌத்த பிக்குகள் விகாரைகளில் தங்கியிருந்தாக குறிப்பிடுகிறார்.[5] கிபி 7 ஆம் நூற்றாண்டின் சீன வரலாற்றுக் குறிப்பின்படி, காவே பேரரசில் கபிசா ஒரு சிற்றரசாக இருந்தது எனக்குறிப்பிடுகிறது.[6][7]

கிபி 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் கபிசா இராச்சியம் துருக்கிய சாகிகளின் ஆட்சியின் சென்றது.[8]காபூல் நகரம் அரசியல் மையமாக இருந்த போதும், பாக்ராம் நகரம் துருக்கிய சாகி இராச்சியத்தின் தலைநகரக விளங்கியது.[9]

கபிசி நகரம்

[தொகு]

கபிசாவைப் பற்றிய முதல் குறிப்புகள் கிமு 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமசுகிருத இலக்கண அறிஞர் பாணினியின் எழுத்துகளில் காணப்படுகிறது. பாணினி என்பது கபிசா இராச்சியத்தின் ஒரு நகரமான கபிசி நகரத்தைக் குறிக்கிறது.[10] கபிசாவிலிருந்து[11] வந்த பிரபலமான மதுவான கபிசாயனாவையும்[12] குறிக்கிறது என பாணினி குறிப்பிடுகிறார். கபிசி நகரத்தை அப்பல்லோடோடஸ்/யூக்ராடிட்ஸ், மற்றும் நெசாக் ஹன்ஸின் இந்தோ-கிரேக்க நாட்டின் நாணயங்களிலும் கபிசி என்றே குறிப்பிடுகிறது.[13]

1939 ஆம் ஆண்டு தொல்பொருள் கண்டுபிடிப்புகள், கபிசா நகரம், கபிசாயன மதுவின் ஒரு பேரங்காடியாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.அக்கால மது வர்த்தகத்தின் சிறப்பிறகு அடையாளமாம ஏராளமான கண்ணாடிக் குடுவைகள், மீன் வடிவ மது ஜாடிகள் மற்றும் மது குடிக்கும் கோப்பைகளைக் கண்டுபிடித்தனர்.[14] இப்பகுதியின் திராட்சை மற்றும் கபிசாயனி மது ஆகியவை பண்டைய இந்திய இலக்கியத்தின் பல படைப்புகள் குறிப்பிட்டுள்ளது.[15]மகாபாரதம் கபிசா நகரத்தில் அடிமை முறை இருந்ததை குறிப்பிட்டுள்ளது.[16]பாக்ராம் நகரத்தில் கலை வேலைப்பாடுகள் கொண்ட யானை தந்தங்கள் எரிந்த நிலையில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கபிசாவிலிருந்து சென் இனக் குதிரைகள் வந்ததாகவும், பல வகையான தானியங்கள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், யூ-கின் எனப்படும் வாசனையுள்ள வேரும் இருந்ததாகவும் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.

பிற்காலத்தில் கபிசா லம்பகா, நகரா[17], காந்தாராம் மற்றும் பானு உள்ளிட்ட பத்து அண்டை நகரங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய ஒரு பௌத்த சத்திரிய மன்னரால் ஆளப்பட்ட ஒரு இராச்சியமாக கபிசா இராச்சியம் இருந்ததாக யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.[18]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fondukistan monastery
  2. Kuwayama, S. (2002). Across the Hindukush of the First Millennium: a collection of the papers (PDF). Institute for Research in Humanities, Kyoto University. pp. 215–216. Archived (PDF) from the original on 6 June 2022. Retrieved 24 November 2021.
  3. Journal of the Asiatic Society of Pakistan, Volumes 4–6. Asiatic Society of Pakistan, 1959.[1] பரணிடப்பட்டது 2 சூலை 2023 at the வந்தவழி இயந்திரம்
  4. Dr S. Chattopadhyaya 1974: 58; India as Known to Panini, 1953, p. 71, Dr V. S. Aggarwala; Foreign Elements in Ancient Indian Society, 2nd Century BC to 7th Century AD, 1979, p. 86, Dr Uma Prasad Thapliyal.
  5. Dust in the wind: retracing Dharma Master Xuanzang's Western pilgrimage. Rhythms Monthly, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 986-81419-8-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-986-81419-8-8 [2] பரணிடப்பட்டது 2 சூலை 2023 at the வந்தவழி இயந்திரம்
  6. Gandhāran Buddhism: archaeology, art, texts. Asian religions and society series. Pia Brancaccio, Kurt A. Behrendt. UBC Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7748-1080-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-1080-7 [3] பரணிடப்பட்டது 31 சனவரி 2024 at the வந்தவழி இயந்திரம்
  7. Kuwayama, S. (2002). Across the Hindukush of the First Millennium: a collection of the papers (PDF). Institute for Research in Humanities, Kyoto University. pp. 215–216. Archived (PDF) from the original on 6 June 2022. Retrieved 24 November 2021.
  8. Buddha Prakash . Glimpses of ancient Panjab. Sita Ram Kohli memorial lectures. Punjabi University, Dept. of Punjab Historical Studies, 1966 [4] பரணிடப்பட்டது 2 சூலை 2023 at the வந்தவழி இயந்திரம்
  9. Giovanni Verardi, Elio Paparatti. Buddhist caves of Jāghūrī and Qarabāgh-e Ghaznī, Afghanistan. Volume 2 of Reports and. IsIAO, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-85320-22-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-85320-22-2 [5] பரணிடப்பட்டது 2 சூலை 2023 at the வந்தவழி இயந்திரம்
  10. Dr S. Chattopadhyaya 1974: 58; India as Known to Pāṇini, 1953, p 71, Dr V. S. Aggarwala; Foreign Elements in Ancient Indian Society, 2nd Century BC to 7th Century AD, 1979, p 86, Dr Uma Prasad Thapliyal.
  11. Ashtadhyayia Sutra IV.2.99.
  12. Sutra IV.2.29.
  13. See: Notes on Indian coins and Seals, Part IV, E. J. Rapson in Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland, 1905, p 784, (Royal Asiatic Society of Great Britain and Ireland).
  14. A Grammatical Dictionary of Sanskrit (Vedic): 700 Complete Reviews of the Best Books for ..., 1953, p 118, Dr Peggy Melcher, Vasudeva Sharana Agrawala, Surya Kanta, Jacob Wackernagel, Arthur Anthony Macdonell.
  15. Cultural History of Ancient India: A Socio-economic and Religio-cultural Survey of Kapisa and ..., 1979, p 29, Jaya Goswami; India as Known to Pāṇini: A Study of the Cultural Material in the Ashṭādhyāyī, 1953, 118, Dr Vasudeva Sharana Agrawala
  16. Mahabharata 2.48.7.; Tribes in the Mahabharata: A Socio-cultural Study, 1987, pp 94,314, Krishna Chandra Mishra - Mahābhārata; Geographical and Economic Studies in the Mahābhārata: Upāyana Parva, 1945, p 44, Dr Moti Chandra - India
  17. Nagara (ancient city)
  18. Su-kao-seng-chaun, Chapter 2, (no. 1493); Kai-yuan-lu, chapter 7; Publications, 1904, p 122–123, published by Oriental Translation Fund (Editors Dr T. W. Rhys Davis, S. W. Bushel, London, Royal Asiatic Society).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிசா_இராச்சியம்&oldid=4296255" இலிருந்து மீள்விக்கப்பட்டது