கபாலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்[தொகு]

இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

இக்கோயில் பல்லவர்களால் ஏழாம் நுற்றாண்டில் கட்டப்பட்டது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகிறது. இங்கு பார்வதி மயில் ரூபத்தில் சிவனை நோக்கித் தவமிருப்பதாகவும் அதனாலேயே இப்பகுதி மயிலாப்பூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்களையும், மாடவீதிகளையும், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டுள்ளது.

[[பகுப்பு  :சென்னை கோவில்கள்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாலீசுவரர்_கோயில்&oldid=2344968" இருந்து மீள்விக்கப்பட்டது