கபஸ் ஹேரா
கபஸ் ஹேரா
கபசேரா | |
---|---|
ஆள்கூறுகள்: 28°31′34″N 77°04′48″E / 28.5261°N 77.0800°E | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | தென்மேற்கு தில்லி மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,00,000+ |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி & ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | DL9C |
இணையதளம் | https://dmsouthwest.delhi.gov.in/ |
கபஸ் ஹேரா (Kapas Hera), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள தென்மேற்கு தில்லி மாவட்டம் மற்றும் கபாஸ்சேரா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு தென்மேற்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,370 குடியிருப்புகள் கொண்ட கபஸ் ஹேரா நகரத்தின் மக்கள் தொகை 74,073 ஆகும். அதில் 50,123 ஆண்கள் மற்றும் 23,950 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்1 3.02 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 478 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.49 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 8.78 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 81.42%, இசுலாமியர் 17.76%, கிறித்தவர்கள் 0.55%, சீக்கியர்கள் 0.14% மற்றும் பிற சமயத்தினர் 0.14% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 48 கபஸ் ஹேரா வழியாகச் செல்கிறது. மற்றும் தேசிய நெடுஞ்சாலை 79 இந்நகர்புறத்திற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் செல்கிறது.
மெட்ரோ
[தொகு]துவாரகா மெட்ரோ நிலையம் இதற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]
வானூர்தி நிலையம்
[தொகு]இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் கபஸ் ஹேராவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தொடருந்து நிலையம்
[தொகு]விஜாசன் தொடருந்து நிலையம் கபஸ் ஹோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பேருந்துகள்
[தொகு]மாநகர தில்லி போக்குவரத்து கழகத்தின் கீழ்கண்ட எண்கள் கொண்ட பேருந்துகள் கபஸ் ஹேரா வழியாகச் செல்கிறது. அவைகள் பின்வருமாறு:. 543, 539, 578, 543A, 718, 712, 804A, 729.