கன இராகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன இராகங்கள் எனப்படுபவை கருநாடக இசையில் தானம் (கனம்) அல்லது மத்யம காலம் பாடுவதால் அல்லது வாசிப்பதால் எளிதாக வெளிப்படும் இராகங்கள் ஆகும். கனராகங்கள் இரு வகைப்படும். அவை:

 • கனபஞ்சக இராகங்கள்
 • திவிதிய கனபஞ்சக இராகங்கள்

கனபஞ்சக இராகங்கள்[தொகு]

தானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :

 1. நாட்டை
 2. கௌளை
 3. ஆரபி
 4. வராளி
 5. ஸ்ரீராகம்/சிறீராகம்

இவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

திவிதிய கனபஞ்சக இராகங்கள்[தொகு]

கனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் திவிதிய கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :

 1. கேதாரகௌளை
 2. ரீதிகௌளை
 3. நாராயணகௌளை
 4. சாரங்கநாட
 5. பௌளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன_இராகங்கள்&oldid=447224" இருந்து மீள்விக்கப்பட்டது