கன்வர் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராவ் பகதூர் கன்வர் சென் (Kanwar Sen) (1899 – 1979) இந்தியாவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் ஆவார். பிகானேர் மாநிலத்தில் தலைமை பொறியாளராக இருந்த இவர் ராஜஸ்தான் கால்வாய் குறித்தத் திட்டத்தையும், கங்கை கால்வாய் திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தினார். இவர் தனது காலத்தின் நீர்ப்பாசன பொறியியலின் ஒரு களமாக கருதப்பட்டார். இவர் 1899 இல் ஹிசார் மாவட்டத்தில் ( அரியானா ) தோஹானாவில் பிறந்தார். லாகூரின் டி.ஏ.வி கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் 1927 ஆம் ஆண்டில் ரூர்க்கியின் (இப்போது, இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி ) தாம்சன் கட்டிடப் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவருக்கு 1956இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1]
இவர் ஒரு "பொறியாளரின் நினைவூட்டல்கள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவர், இந்திய அரசில் பாசன மற்றும் மின் அமைச்சகத்தில் மத்திய நீர் மற்றும் மின் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்வர்_சென்&oldid=3335047" இலிருந்து மீள்விக்கப்பட்டது