கன்பரா ஆறுபடை முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆறுபடை முருகன் கோயில் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவிலுள்ள டொரென்ஸ் (Torrens) என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

முருகன் கோயிலின் முதற்கட்ட அமைப்பாக 1996 ஆம் ஆண்டு ஒரு மண்டபம் கட்டப்பட்டது. அதில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகன் முதன்மைத் தெய்வமாக தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விநாயகர், சிவா-பார்வதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மகா விஷ்ணு, துர்க்கை, நடராஜர், வைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக தாபிக்கப்பட்டு 1997 நவம்பர் 9 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினசரி மூன்று வேளைப் பூசைகள் நடைபெறுகின்றன. புதிய கோயில் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதில் முருகனுக்குரிய ஆறு படை வீடுகளையும் குறிக்கும் முகமாக ஆறு தனி கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]