கன்பத்ராவ் தேவ்ஜி தபசே
Appearance
கன்பத்ராவ் தேவ்சி தபசே (Ganpatrao Devji Tapase) (30 அக்டோபர் 1909 [1] – 3 அக்டோபர் 1992, மும்பை) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி, இந்தியச் சுதந்திர ஆர்வலர் மற்றும் மகாராட்டிராவில் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆவார்.
கல்வி
[தொகு]தபசே, பெர்குசன் கல்லூரியிலும் புனே சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
அரசியல்
[தொகு]தபசே 1946 மற்றும் 1952ஆம் ஆண்டுகளில் சதாரா மாவட்டத்திலிருந்துபம்பாய் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 3 ஏப்ரல் 1962 முதல் 2 ஏப்ரல் 1968 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2]
ஆளுநர் பதவி
[தொகு]தபசே 2 அக்டோபர் 1977 முதல் 27 பிப்ரவரி 1980 வரை உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக இருந்தார்.[3] பின்னர் 28 பிப்ரவரி 1982 முதல் 14 சூன் 1984 வரை அரியானா மாநில ஆளுநராக இருந்தார்.
நூல்
[தொகு]- மண்குடிசையிலிருந்து ராஜ்பவன் வரை: ஆளுநரின் சுயசரிதை (1983)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ His actual date of birth according to the Rajya Sabha website is 30 October 1908, though his official date of birth found in the Governor of Uttar Pradesh website is 15 July 1909
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF).
- ↑ "Shri Ganpat Rao Devji Tapase, Governor of UP". Governor of Uttar Pradesh website. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011.