கன்னையா குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னையா குமார்
2016 மே மாதத்தில், கேரளத்தில் கன்னையா குமார்
பிறப்புபேகூசராய் மாவட்டம், பீகார், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஜ. நே. பல்கலையில் ஆபிரிக்கர்கள் ஆய்வில் முனைவர் பட்டத்திற்கு
பணிமாணவர் தலைவர்
அமைப்பு(கள்)அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு

கன்னையா குமார் (Kanhaiya Kumar) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாணவரணியான அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர். இவர் 2015ஆம் ஆண்டுக்கான ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 2016இல் பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்ட மாணவர் கூட்டமொன்றில் நாட்டுக்கெதிரான முழக்கங்களை முழங்கியதாக இவரும் உமர் கலீதும் நாட்டுத் துரோக சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.[1]காஷ்மீர் பிரிவினைவாதியும் இந்திய நாடாளுமன்றத்தை தாக்கிய குற்றவாளியுமான மொகமது அஃப்சல் குரு 2013இல் தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து உரையாற்றியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின; ஆனால் இவை காவல்துறையால் மாற்றப்பட்ட ஒளிதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டு எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.[2]

இளமையும் அரசியல் ஈடுபாடும்[தொகு]

கன்னையா குமார் பீகாரிலுள்ள பேகூசராய் மாவட்டத்து சிற்றூரொன்றில் பிறந்தார். இந்தச் சிற்றூர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வலுவானத் தொகுதியாகக் கருதப்படும் டேகரா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது.[3] குமாரின் தந்தை, ஜெயசங்கர் சிங், சில ஆண்டுகளாக பக்கவாத நோயுற்றுள்ளார் ; தாய் மீனாதேவி, ஓர் அங்கன்வாடி ஊழியராவார். இவரது அண்ணன் தனியார்துறையில் பணிபுரிகின்றார். இவரது குடும்பத்தினர் அனைவருமே இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஆதரவாளர்கள்.[4]

கன்னையா குமார் பீகாரின் தொழிலக நகரமான பரவுனியில் உள்ள ஆர்கேசி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். தனது பள்ளிக்காலத்திலேயே குமார் இடதுசாரி பண்பாட்டு குழுவான இந்திய மக்கள் நாடக சங்கத்தின் நாடகங்களிலும் செயற்பாடுகளிலும் பங்கேற்றார். 2002இல் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிப் படிப்பிற்காக பட்னா சென்றார். அங்கு கல்லூரியில் படித்துக்கொண்டே மாணவர் அரசியலில் ஈடுபட்டார். மகதப் பல்கலைக்கழகத்திலிருந்து புவியியலில் பட்டம் பெற்றார்.[5] அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பில் இணைந்த குமார் ஓராண்டுக்குப் பிறகு பட்னாவில் நடந்த மாநாட்டுக்குப் பேராளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பட்டமேற்படிப்பை முடித்த குமார் தில்லி சென்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குள்ள பன்னாட்டு கல்விப் பள்ளியில் தற்போது ஆபிரிக்க ஆய்வுகளில் முனைவர் பட்டத்திற்கு முயன்று வருகின்றார்.[6] செப்டம்பர் 2015இல் ஜ.நே.பல்கலையின் முதல் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு சேர்ந்த மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு எதிராக போட்டியிட்ட அனைத்திந்திய மாணவர் சங்கம் (AISA), அகில பாரத வித்தியார்த்தி பரிசத், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய தேசிய மாணவர்கள் ஒன்றியம் (NSUI) சேர்ந்தவர்கள் தோல்வியுற்றனர். குமாரின் நண்பர்களும் பார்வையாளர்களும் இவர் வாக்குவன்மை மிகுந்தவராக விவரிக்கின்றனர். இவரது பேச்சுத்திறமையே மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் காரணமாக அமைந்தது.[7]

2016 நாட்டுத்துரோகச் சர்ச்சை[தொகு]

பெப்ரவரி 12, 2016இல் கன்னையா குமார் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பெப்ரவரி 13 அன்று அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-A (நாட்டுத் துரோகம்), 120-B (குற்றவியல் சதி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. சவகர்லால் பல்கலை வளாகத்தில் நாடாளுமன்றத்தைத் தாக்கிய அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக சில மாணவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வைக் குறித்து அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிர்ரியும் புகாரளித்ததை ஒட்டி இவ்வழக்கு பதியப்பட்டது. புலன்விசாரணையின்போது இந்த நிகழ்வில் தானேதும் நாட்டுத் துரோகமானச் சொற்களைக் கூறவில்லை என குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.[8]

அவரை விசாரணைக்காக தில்லி பாட்டியாலா மாளிகை நீதிமன்ற வளாகத்துக்கு பெப்ரவரி 15, 17 ஆகிய நாட்களில் அழைத்து வந்தபோது வன்முறை வெடித்தது. ஒரு சில வழக்குரைஞர்களும், வெளிக் கும்பலும் சேர்ந்து கன்னையா குமாரையும் அவருடனிருந்த பிற ஜ.நே.ப மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மீதும் தாக்குதல் நடத்தினர்.[9][10]

கன்னையா குமாரின் கைதும் தாக்குதலும் ஓர் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியது; எதிர்க்கட்சிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அரசின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தனர். ஜ.நே.ப மாணவர்கள் கைதை எதிர்த்து மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் முடங்கியது.[11]

கன்னையா குமாரின் பெற்றோர் தங்கள் மகனின் இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் நோக்குக்காக இரையாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.[12][13] பெப்ரவரி 22, 2016 அன்று இந்தியா டுடே ஒளிதம் ஒன்றில் பாட்டியாலா மாளிகையில் மூன்று வழக்கறிஞர்கள் காவல்துறை காப்பிலிருந்த கன்னையனை தாக்கியதாக கூறியதை ஒளிபரப்பியது.[14] நிதிமன்ற வளாகத் தாக்குதல்களை விசாரிக்க ஆறு உறுப்பினர் விசாரணைக் குழுவொன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்தக்குழு வளாகத்திலிருந்த காவலர்களின் பொறுப்பின்மையை உறுதி செய்தது; மேலும் காவல்துறையினர் இருவரை மன்றக் கூடத்தினுள் நுழைய அனுமதித்தாகவும் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு மாறாக, அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரை தாக்குவதை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அறிக்கை வழங்கியது.[15]

மார்ச் 2, 2016இல் தில்லி உயர்நீதி மன்றம் கன்னையா குமாருக்கு ஆறு மாத காலத்திற்குப் பிணை வழங்கியது; 10,000 பிணைப்பணமும் தான் தேசத்துரோக செயற்பாடுகளில் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியையும் தரவேண்டும் என விதித்தது.[16]

மார்ச் 3, 2016 அன்று ஜ.நே.ப வளாகத்தில் பிணையில் வெளிவந்த கன்னையா குமார் உரை நிகழ்த்தினார். இந்த உரையின்போது அவர் தனக்கு இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டாம்; இந்தியாவிற்குள்ளே விடுதலை வேண்டும் என முழங்கினார். நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்குடன் செயல்படும் இராட்டிரிய சுயம்சேவாக் சங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற மாணவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். தனது கைதுக்கு காரணமாகவிருந்த அகில பாரத வித்தியார்த்தி பரிசத் தோழர்களை தனது எதிராளிகளே தவிர பகையாளிகள் அல்ல எனக் கூறினார். தனது ஆதரவாளர்களை ஆசாதி (விடுதலை) கோரி முழக்கமிட்டவாறிருக்கக் கோரினார்.[17][18][19][20]

இவர் 2021 ஆண்டு இ.தே.காங்கிரசின் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார்.[21]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "#SeditionDebate: Everything you need to know about Umar Khalid, the man they're calling 'Kashmiri traitor'". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-02-27.
  2. "Why an Indian student has been arrested for sedition". BBC News. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
  3. Anuja. "JNU row: Who is Kanhaiya Kumar?". livemint.com.
  4. "JNU row: How Kanhaiya Kumar became president of JNU Students' Union". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
  5. http://www.telegraphindia.com/1160219/jsp/bihar/story_70065.jsp#.VtqLOpx97IU
  6. "JNU row: How Kanhaiya Kumar became President of JNU's students union". dna. 15 February 2016.
  7. "10 Lesser Known Facts about Kanhaiya Kumar – The JNUSU President!". பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
  8. "Exclusive: JNUSU chief Kanhaiya Kumar's interrogation report accessed".
  9. "தில்லி நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் மோதல்: ஜேஎன்யு விவகாரம்". தினமணி. 18 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. பெப்ரவரி 28, 2016. "போலீஸார் முன்னிலையில் தாக்கப்பட்டேன்:விசாரணைக் குழுவிடம் கன்னையா முறையீடு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: numeric names: authors list (link)
  11. Jason Burke. "Protests to continue at Indian university after student leader's arrest". the Guardian.
  12. "JNUSU president Kanhaiya Kumar 'victim of Hindutva politics' say parents". Hindustan Times.
  13. "எனது மகன் தீவிரவாதி அல்ல என்பதை உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும் :கன்னையா குமாரின் தாயார்". தினமணி. 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. Mathur, Avarnita (22 February 2016). "EXCLUSIVE: Kanhaiya wet his pants while we beat him up in police custody, say lawyers behind Patiala House assault". India today. http://indiatoday.intoday.in/story/exclusive-kanhaiya-wet-his-pants-while-we-beat-him-up-in-police-custody-say-lawyers-behind-patiala-house-assault/1/602690.html. பார்த்த நாள்: 24 February 2016. 
  15. "JNU sedition case: Video is out; Kanhaiya Kumar assaulted, breaks down, police duck for cover". The Indian Express. 28 February 2016.
  16. Mathur, Aneesha (2 March 2016). "JNU row: Kanhaiya Kumar gets 6-month interim bail by Delhi HC - See more at: http://indianexpress.com/article/india/india-news-india/kanhaiya-kumar-bail-jnu-delhi-high-court/#sthash.awHRRtAu.dpuf". Indian Express. http://indianexpress.com/article/india/india-news-india/kanhaiya-kumar-bail-jnu-delhi-high-court/. பார்த்த நாள்: 2 March 2016. 
  17. JNUSU leader Kanhaiya Kumar gives blistering speech after release, The Hindu, 3 March 2016.
  18. Full Speech: Kanhaiya Kumar, Out On Bail, Speaks Of 'Azadi' On JNU Campus, NDTV, 3 March 2016.
  19. 'Azaadi, azaadi': Kanhaiya Kumar gives fiery speech mocking Modi govt, Sangh Parivar at JNU campus, DNA India, 3 March 2016.
  20. 4 மார்ச் 2016. "'இந்தியாவுக்குள் சுதந்திரம் வேண்டும்'- கன்னையா குமாரின் பேச்சுக்கு பெருகும் ஆதரவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: numeric names: authors list (link)
  21. "காங்கிரஸில் மேவானி, கன்ஹையா: தாக்கங்கள் என்ன?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னையா_குமார்&oldid=3928530" இலிருந்து மீள்விக்கப்பட்டது