கன்னி மாடம் (புதினம்)
Jump to navigation
Jump to search
கன்னி மாடம் என்பது சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். இந்நூல் பாண்டியர்களின் உள்நாட்டுச் சண்டைச் சூழலையும் சிங்கள, சோழ அரசுகளால் ஏற்பட்ட போர்ச் சூழலை ஒட்டியும் எழுதப்பட்டது. இச்சண்டையைத் தவிர்க்கவும் பாண்டிய நாட்டை அன்னியர்களின் ஆதிக்கத்திற்குக் கொண்டு செல்லாமல் தடுக்கவும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் கதையில் சொல்லப்பட்டுள்ளது.
கன்னி மாடம் என்பது பாண்டிய நாட்டை ஒட்டியிருந்த மேலைமங்கலத்து மன்னன் தனது மகள் கார்குழலிக்காகப் புதுப்பித்த கோட்டையாகும்.
கதை மாந்தர்[தொகு]
- அபராசிதன் - பாண்டியர் சேனாதிபதி
- கார்குழலி - மேலை மங்கலத்து மன்னன் மழவராயனின் மகள்
- அடிகளார் - கார்குழலியின் ஆசிரியர்
- குலசேகர பாண்டியன் - பாண்டிய மன்னன்
- வீர பாண்டியன் - பாண்டிய மன்னர்
- மாதவி - சிங்களத்துப் பைங்கிளி - சிங்கள சேனாதிபதியின் மருமகள்.