கன்னி கோமி காடுகள்

ஆள்கூறுகள்: 63°37′33″N 58°57′9″E / 63.62583°N 58.95250°E / 63.62583; 58.95250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னி கோமி காடுகள்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அமைவிடம்உரால் மலைகள், கோமி, உருசியா
உள்ளடக்கம்
கட்டளை விதிஇயற்கைக் களம்: (vii), (ix)
உசாத்துணை719
பதிவு1995 (19-ஆம் அமர்வு)
பரப்பளவு2645800 எக்டேர்கள் (10,215 சதுர மைல்கள்)
Buffer zone650,000 எக்டேர்கள் (2,500 சதுர மைல்கள்)
Websitehttp://www.vfk.komi.com
ஆள்கூறுகள்63°37′33″N 58°57′9″E / 63.62583°N 58.95250°E / 63.62583; 58.95250
கன்னி கோமி காடுகள் is located in உருசியா
கன்னி கோமி காடுகள்
Location of கன்னி கோமி காடுகள் in உருசியா.

கன்னி கோமி காடுகள் (Virgin Komi Forests) உருசியாவில் கோமி குடியரசில் வட உரால் மலைகளில் காணப்படும் காட்டுப் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இயற்கையான பாரம்பரிய இடமாகும். 32,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதி ஐரோப்பாவின் மிகப் பெரிய கன்னிக் காடாகும். இது உலக பராம்பரிய இடங்களில் மிகவும் தொலைக்கோடியான இடங்களில் ஒன்றாகும். [1]இதனால் இதுவே மிகவும் பார்வையாளர்கள் காட்சியிட வரும் இடமாகும்.[2]

புவியியல்[தொகு]

இந்த கன்னி கோமி காடுகள், உரால் மலைகளின் தைகா காடுகளின் பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலத்துக்குரியதாகும். சுற்றுலாப் பிரியர்கள் இங்கு பலவகைப் பட்ட நிலக்காட்சிகளை காணலாம். பாதி காடுகள் இங்கு மலையில் காணப்படுகின்றன. வேறு பாதி காடுகள் மலை அடிவாரத்தில் காணப்படுகின்றன. இங்கு அதிக அளவில் ஓங்கலாக காணப்படும் மரங்கள் சைபீரியன் ஸ்ப்ரூஸ் (ஊசியிலை மரவகை), சைபீரிய ஃபிர் (தேவதாரு) மற்றும் சைபீரிய லார்ச் , அதே வேளையில் அதிக அளவில் காணப்படும் பாலூட்டிகள் ரெய்ண்டீர் எனப்படும் ஒரு வகை கலைமான்கள், சைபீரீயா போன்ற பனிபிரதேசங்களில் காணப்படும் கீரியின விலங்குகள், பனிப்பிரதேசத்தில் வாழும் மென்மையான முடி கொண்ட மிங் எனப்படும் சிறு விலங்குகள் மற்றும் பனிமுயல்கள் ஆகும். இங்கு 200 வகையான பறவைகளும் இந்த காடுகளில் பாயும் ஆற்றில் 16 வகையான மீன் இனங்களும் காணப்படுகின்றன. இவற்றில் மிகவும் அரிய வகை மீன் இனமான சைபீரியன் கிரேலிங்க் ஒன்றாகும். இந்தப் பகுதி ருசியாவின் பெகோரா-இல்ச் இயற்கை பாதுகாப்பு மையம் மற்றும் யுகைட் வா இயற்கை பாதுகாப்பு மையத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. இதன் உலக பாரம்பரிய இடத்திற்கான அந்தஸ்து இதற்கு 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது இதன் மூலம் இது நாட்டின் முதல் உலக பாரம்பரிய இடமாகிறது. இந்த அங்கிகாரம் வெளிநாட்டு பண உதவி பெற்றுத் தந்தது. அதன் மூலம் அதிவிரைவில் உறுதியாக மரங்களை வெட்ட ஒரு பிரெஞ்சு நாட்டு வணிக நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட இருந்த நிலையில் இருந்து காக்கப்பட்டது. ஆனாலும் அழிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு ஏற்படக்கூடிய அபாயமானது, முக்கியமாக சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டுதல் குறிப்பாக சுரங்கப் பணிகள் போன்றவை அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. யுகைட்வா தேசிய பூங்காவிற்கு வட பகுதியில் காணப்படும் தங்கபடிமங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முன்பாக வெட்டி எடுக்கப்பட்டன. நிரோப்தான் தேசிய பூங்காவின் எல்லையில் உள்ள மக்கள் குடியேற்றமுள்ள நாடாகும். இங்கு கடுங்காவல் உள்ள ஒரு சிறைச்சாலை உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு தேவாலயம், ஒரு அரும் பொருட் காட்சியகம் உள்ளது. இந்த அரும் பொருட் காட்சியகத்தில் தான் ருசியாவின் ரோமனோவ் அரசு பரம்பரையில் பதவி ஏற்ற முதல் மன்னர் மைக்கேல் ரோமனோவ் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இங்கு உள்ள "ஓப்' ஆற்றங்கரையில் உள்ள சிறிய பட்டணம் லாபிட்னாங்கி இங்கு இரயில் நிலையம் உள்ளது. இது மாஸ்கோவுடன் இணைப்பில் உள்ளது. இது யுகிட்-வா தேசிய பூங்காவின் எல்லையில் உள்ளது.

அபாயங்கள்[தொகு]

இது உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும், குடியரசின் தலைமையும் கோமியின் இயற்கை பாதுகாப்பு அமைச்சகமும் தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்காக இதற்கு எதிராகத்தான் செயற்பட்டு வருகின்றன. இங்குள்ள மண்டல அரசு, இக்காட்டின் எல்லையை, தங்கம் சுரண்டி எடுப்பதற்காக, தங்க படிமங்கள் அமைந்துள்ள பகுதியை, பாதுகாப்பு அமைப்பிலிருந்து மாற்றி அமைக்க எடுத்த முயற்சியை, கோமியின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னி_கோமி_காடுகள்&oldid=2893111" இலிருந்து மீள்விக்கப்பட்டது