உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னிவாடி (திருப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னிவாடி தேர்வுநிலைப் பேரூராட்சி, திருப்பூர் மாவட்டத்தின் 14 பேரூராட்சிகளில் ஒன்றாகும். 24.65 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சி திருப்பூர் மாவட்டத்தின் தென் கிழக்கு எல்லையில் தாராபுரம் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 4385 ஆகும். இப்பேரூராட்சி 12 வார்டுகளும், 40 தெருக்களும் கொண்டது.[1]மேலும் இது வருவாய் கிராமம் ஆகும். விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பை முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் முருங்கைக்காய் இந்திய அளவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை கூடும் வாரச் சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வரும்

வசதிகள்

[தொகு]

இப்பேரூராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிகள் அமைந்துள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம், துணை அஞ்சலகம், தொலைபேசி அலுவலகம், துணை கால்நடை மருந்தகம், கனரா வங்கி, மற்றும் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி ஆகிய அரசு அலுவலகங்கள் அமையப்பெற்றுள்ளது.

அருகமைந்த நகரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிவாடி_(திருப்பூர்)&oldid=4306055" இலிருந்து மீள்விக்கப்பட்டது