கன்னிங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னிங்கைட்டு
Gunningite
பொதுவானாவை
வகைசல்பேட்டுக் கனிமங்கள்
வேதி வாய்பாடு(Zn,Mn2+)SO4•H2O
இனங்காணல்
நிறம்வெண்மையும் நிறமற்றும்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புதெளிவில்லாதது
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுபளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி3.195
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.570 nβ = 1.576 nγ = 1.630
மேற்கோள்கள்[1][2][3]

கன்னிங்கைட்டு (Gunningite) என்பது Zn,Mn2+)SO4•H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கையிசெரைட்டு குழுவில் இடம்பெற்றுள்ள கனிமங்கள் பலவற்றில் கன்னிங்கைட்டு கனிமமும் ஒன்றாகும். 1901-1991 காலப்பகுதியில் பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் கனடா நிலவியல் அளவைத் துறையைச் சேர்ந்தவருமான என்றி செசில் கன்னிங்கு என்பவரைப் பெருமைப்படுத்த கனிமத்திற்கு இப்பெயர் இடப்பட்டது.[2]

தோற்றம்[தொகு]

கன்னிங்கைட்டு கனிமம் அரிதாகத் தோன்றக் கூடியதாகும். சிபேலரைட்டு கனிமத்தைக் கொண்டிருக்கும் படிவுகளின் ஆக்சிசனேற்றமடைந்த பகுதியின் உலர்ந்த பரப்புகளில் இது காணப்படுகிறது. கனடாவின் யுக்கோன் பிரதேசம், பிரிட்டிசு கொலம்பியா, நியூ பிரன்சுவிக், ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மற்றும் அரிசோனா, சுவிட்சர்லாந்தின் வேலைசு, கிரீசு, அட்டிகா, செருமனியின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு போன்ற இடங்களின் சுரங்கங்களில் கன்னிங்கைட்டு கனிமம் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிங்கைட்டு&oldid=2918767" இலிருந்து மீள்விக்கப்பட்டது