கன்னிகா பரமேஸ்வரி கோயில், உப்பங்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, உப்பங்காட்டில் உள்ளது.

தல பெருமை, வரலாறு[தொகு]

இந்த ஆலயம் பல நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றியது. பின்பு மழைக்காலங்களில் இடிந்து தரைமட்டமானது. பின்பு மீண்டும் உயிர் தோற்றம் பெற்று கன்னிகா பரமேஸ்வரியாகவும், ஆதிபாராசக்தியாகவும், சாமுண்டியாகவும், வீரமாகாளியாகவும், புற்றுமாரியம்மன்னாகவும் விளங்குகிறாள். கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு எதிரில் காவல் தெய்வமாக இடும்பன் கடம்பன் இருக்கிறார்கள். சிறப்பு என்னவென்றால் எல்லா ஆலயங்களில் அம்மனுக்கு எதிரில் பெண் தெய்வம் காவலாக இருக்கும். ஆனால் இங்கு ஆண் தெய்வம் காவலாக இருக்கிறது. மேலமாத்தூரிலிருந்து எழு பெண்கள் மழை வெள்ளத்தில் வந்து தஞ்சம் புகுந்தனர். பின்பு எழு பெண்களும் சிலையாகவும் நின்றனர். அதில் கடைக்கன்னி என்பவள் சாமுண்டியாக மாறினாள். அவளை கன்னிகா பரமேஸ்வரியாகவும் மக்கள் வழிபடுகின்றனர்.

அமைவிடம்[தொகு]

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, புத்தூரிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உப்பங்காடு என்ற சிற்றூரில் இருக்கிறது.

நம்பிக்கைகள்[தொகு]

நாக தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இப்புற்றுக்கு பால் ஊற்றி புதிய ஆடை சாத்தி, மஞ்சக்கயிறு, குங்குமம் ,வளையல் பிரார்த்தனை செய்தால் நாக தோஷம் விலகுவதாகவும் குழந்தை இல்லாதவர், காதலர்கள் பிரார்த்தனை செய்து நம்புகின்றனர். புதுமண்ணியாற்றின் கரையோரத்தில் கன்னி வாய்க்கால் நடுவில் புற்றொன்று இருந்தது. அதில் இளையக்கன்னியாகவும் சாமுண்டியாகவும் இருக்கிறாள்.

பொது தகவல்கள்[தொகு]

மூலவர்: அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி (சாமுண்டி) வாகனம்: குதிரை தலவிருட்சம்: ஈச்ச மரம் திருவிழா: மாசிமாத திருவிழா, ஆடிமாத பால்குடத் திருவிழா திறக்கும் நேரம்: எந்த நேரத்திலும் தரிசிக்கலாம்