கன்னாதிட்டி காளி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னாதிட்டி காளி கோவில் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நகரத்தில் கஸ்தூரியார் தெருவும் கன்னாதிட்டி தெருவும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. காளி அம்பாள் வடக்கு பார்த்து அமர்ந்துள்ளார். காளிதேவியின் நேர் எதிரே தாமரை குளம் அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் கிழக்கு பார்த்து முதல் தரிசனம் அருள்பவர் மூக்சிக்கவாகனன் பறந்து விரிந்த அரசமரத்தடியின் கீழே சந்நிதி கொண்டிருக்கிறார். இக் கோவிலைச் சுற்றி வடமேற்கில் சிவன் கோவிலும் வடகிழக்கில் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளன.

நவராத்திரி காலங்களில் வெகு சிறப்பாகப் பூசைகள் நடைபெறும். மாசி மாதம் அம்பாளுக்குத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் அத்துடன் அந்நாட்களில் உத்சவ அம்பிகை எட்டு யாழிகள் அமைந்த சித்திரத் தேரில் மேல் அமர்ந்து வெளிவீதி உலா வருவாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னாதிட்டி_காளி_கோவில்&oldid=1796808" இலிருந்து மீள்விக்கப்பட்டது