கன்டிலோ
கன்டிலோ Kantilo | |
---|---|
நகரம் | |
![]() கன்டிலோவிலுள்ளா நீல மாதவக் கோயில் | |
ஆள்கூறுகள்: 20°21′N 85°11′E / 20.35°N 85.18°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | நயாகட் |
அரசு | |
• வகை | கன்டிலோ நகராட்சி |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 30 km2 (10 sq mi) |
ஏற்றம் | 65 m (213 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 25,000 |
• அடர்த்தி | 830/km2 (2,200/sq mi) |
ஒடியா, ஆங்கிலம், இந்தி | |
• அலுவல் | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | OD |
இணையதளம் | odisha |
கன்டிலோ (Kantilo) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவிலுள்ள நயாகட் மாவட்டத்தின் ஒரு நகரமும் மற்றும் பேரூராட்சியும் ஆகும்.[1] இது நீலமாதவன் எனும் கடவுளுக்கு புகழ்பெற்ற புனித இடமாகும். நயாகட் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான வணிக இடமானா இது அதன் கையால் வடிவமைக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களுக்கும் பிரபலமானது.
புவியியல்
[தொகு]கன்டிலோ 20°21′N 85°11′E / 20.35°N 85.18°E ஆயத்தொலைவில் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 65 மீட்டர்கள் (213 அடி) உயரத்தில் உள்ளது. வெப்பநிலை 15 °C முதல் 40 °C வரை மாறுபடும்.
மக்கள்தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கன்டிலோவின் மக்கள் தொகை 8728 ஆகும்.[3] மக்கள் தொகையில் ஆண்கள் 51% ஆகவும், பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். கன்டிலோவின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 80% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 64% ஆகவும் உள்ளது. கன்டிலோவில், மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.
ஆர்வமுள்ள இடங்கள்
[தொகு]
பெயர் | பிரபலம் |
---|---|
கன்டிலோ | நீலமாதவ கோயில் |
கன்டிலோ | நாராயணி கோயில் |
சித்தாமுலா | கோகுலானந்தா சுற்றுலா மையம் |
சரங்குல் | இலடூகேசுவர் கோயில் |
ஒடகான் | இரகுநாத் கோயில் |
துதிசேஸ்வர் | சிவன் கோயில் |
தசாபல்லா | குவான்ரியா அணை |
இராணாப்பூர் | மணிநாகேசுவரி கோயில் |
சதோகசியா | சரணாலயம் |
பைசிபள்ளி | சரணாலயம் |
அணுகல்
[தொகு]கான்டிலோ அதன் மாநிலத் தலைநகர் புவனேசுவரிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான நாயகட்டிலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கன்டிலோ மணி உலோக பாத்திரத்திற்கு பிரபலமானது. ஆனால் இப்போதெல்லாம் அது அதன் பளபளப்பை இழந்து வருகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Odisha creates 39 urban local bodies for socio-economic development". The Print. 24 February 2024. https://theprint.in/india/odisha-creates-39-urban-local-bodies-for-socio-economic-development/1977869/.
- ↑ Falling Rain Genomics, Inc - Kantilo
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ Bell metal craft losing its sheen