கன்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Kansai International Airport

関西国際空港

Kansai Kokusai Kūkō
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்Kansai Airports[1]
சேவை புரிவதுGreater Osaka Area
அமைவிடம்இசுமிசானோ, சின்னான், & Tajiri
ஒசாகா, சப்பான்
மையம்
  • அனைத்து நிப்பான் ஏர்வேசு
  • ஃபிடக்சு எக்பிரசு[2]
  • சப்பான் ஏர்லைன்சு
  • ஜெஸ்டார் சப்பான்
  • நிப்பான் சரக்கு ஏர்லைன்சு
  • பீச்
உயரம் AMSL5 m / 17 ft
இணையத்தளம்www.kansai-airport.or.jp/en/index.asp
நிலப்படம்
KIX RJBB is located in யப்பான்
KIX RJBB
KIX
RJBB
Location in Japan
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
06R/24L 3,500 11,483 Asphalt concrete
06L/24R 4,000 13,123 Asphalt concrete
புள்ளிவிவரங்கள் (2015)
Aircraft movements163,506
( 15%)
Passenger movements23,214,756
( 20%)
International passenger movements16,250,323
( 24%)
Freight volume in tonnes719,331
( -0.5%)
International Freight volume in tonnes697,374
( 10%)
Statistics from New Kansai International Airport Company, Ltd.[3]

கன்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kansai International Airport)(関西国際空港 Kansai Kokusai Kūkō?) (IATA: KIX, ICAO: RJBB) என்பது சப்பான் நாட்டின் கன்சாய் மாகாணத்தில் உள்ள ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது ஒரு செயற்கை தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் வானூர்தி நிலையமாகும். இது ஒசாகா வளைகுடாவின் மையத்தில், ஒசாகா நிலையத்தின் தென்மேற்கில் 38 km (24 mi) தொலைவில் அமைந்துள்ளது,[4] இதன் அருகில் மூன்று நகராட்சிகள் அமைந்துள்ளன அவை இசுமிசானோ (வடக்கு),[5] சின்னான் (தெற்கு),[6] தாஜிரி (மையம்),[7] ஆகும். இது ஒன்சூ கரையில் இத்தாலிய கட்டடக்கலை நிபுணரான ரென்கோ பியானோ என்பவரின் வடிவமைப்பால் கட்டப்பட்டது. இந்த வானூர்தி நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 4 லட்சத்து 53 ஆயிரத்து 993 சதுர மீட்டர். உயரம் 36.64 மீட்டர். ஒரு அடித்தளமும், நான்கு மேல் தளங்களுடனுத் இந்த வானூர்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு வானூர்தி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

கடலில் வானூர்தி நிலையத்தை கட்ட திட்டமிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, கல் மற்றும் மண்ணைக் கொண்டு நிரப்பும் முறையில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக சப்பானில் உள்ள மலைக் குன்றுகள் தகர்க்கப்பட்டு மண்ணும் கல்லும் கடலில் கொட்டப்பட்டன. மண்ணை நிரப்பும் பணிகள் முடிந்த பிறகு கட்டடம் கட்டும் பணிகள் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. கடல் மேலே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க அப்போது 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.[8] இந்த நிலையம் பணிகள் முடிந்து 1994 செப்டம்பர் 4 அன்று திறக்கப்பட்டது. இது ஒசாகா நகரத்துக்கு அண்மையில் உள்ளது.

இந்த நிலையம் பன்னாட்டு நிலையமாக செயல்படுகிறது. அனைத்து நிப்பான் ஏர்வேஸ் , ஜப்பான் ஏர்லைன்ஸ் , நிப்பான் சரக்கு விமானங்கள் போன்ற வானூர்திகள் இங்கு இயக்கப்படுகின்றன. இது சப்பானியர்களால் கான்கு Kankū (関空?) என பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "New Management Setup of Kansai Airport" (PDF). Kansai Airports. Kansai Airports. 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-04-24.
  2. "FedEx Opens North Pacific Regional Hub at Kansai International Airport". newswit.com. 3 July 2014. Archived from the original on 9 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 July 2014.
  3. "Preliminary Operational Statistics for KIX and ITM for December and Calendar Year of 2015" (PDF). New Kansai International Airport Co., Ltd. New Kansai International Airport Co., Ltd. 2015-01-20. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.
  4. AIS Japan
  5. Home பரணிடப்பட்டது 2011-08-08 at the வந்தவழி இயந்திரம்.
  6. "OSAKA KANSAI (Kansai International Airport)."
  7. "航空運送事業の許可について(Peach・Aviation 株式会社)."
  8. "கடல் மேலே விமான நிலையம்!". தி இந்து தமிழ். 6 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2016.