கனூரி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனூரி மக்கள்
Ali Modu Sherrff crop 2007.jpg
அலி மோடு செரீஃப், ஒரு கனூரி அரசியல்வாதியும் நைசீரியாவின் போர்னோ மாநிலத்தின் ஆளுனரும், 2007
மொத்த மக்கள்தொகை
(10 மில்லியன் (2013 மதிப்பீடு))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
நைசீரியா, தென்கிழக்கு நைகர், மேற்கு சாட் மற்றும் வட கமரூன்.
 நைஜீரியா
         
6,980,000(2013)
மங்காரி உள்ளடக்கப்படவில்லை[1]
 சாட்1,100,000 (2013)
இதில் பெரும்பாலானவர்கள் கனெம்பு துணைக்குழு[2]
 நைஜர்850,000 (2013)
மங்காரி, துமாரி, பிளா பிளா ஆகியோரை உள்ளடக்கியது.[3]
 கமரூன்56,000 (1982)[4]
மொழி(கள்)
கனூரி மொழி
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கனெம்பு மக்கள், சகாவா, அவுசா, சுவா

கனூரி மக்கள், இன்றைய நைகர், நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளில் இருந்த முன்னாள் கானெம் பேரரசு, போர்னு பேரரசு ஆகியவற்றின் நிலப்பகுதிகளில் வாழும் ஒரு இனக்குழு ஆகும். கனூரி எனப் பொதுவாக அழைக்கப்படுபவர்களில், பல்வேறு துணைக் குழுக்களும், கிளைமொழிக் குழுக்களும் அடங்குகின்றன. இவர்களுட் சிலர் தாம் கனூரிகளிலிருந்து வேறானவர்கள் என உணர்கின்றனர். பெரும்பாலானவர்கள் தாம் மத்தியகால கானெம்-போர்னு பேரரசின் அல்லது அதன் மாகாணங்களின் ஆட்சியாளர்களின் கால்வழிகளில் இருந்து தோன்றியவர்கள் என நம்புகின்றனர். அயலவர்களான டூபூ அல்லது சாகாவா இடையர் குழுக்களுடன் ஒப்பிடும்போது கனூரிக் குழுக்கள் மரபுவழியாக உடலுழைப்புக் குறைந்தவர்கள். இவர்கள் வேளாண்மை, சாட் ஏரியில் மீன் பிடித்தல், வணிகம், உப்பு விளைவித்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனூரி_மக்கள்&oldid=1929218" இருந்து மீள்விக்கப்பட்டது