கனிவு (சிறுகதைத் தொகுப்பு)
Appearance
![]() | |
நூலாசிரியர் | வண்ணதாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | சிறுகதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | சந்தியா பப்ளிகேஷன் |
பக்கங்கள் | 144 |
ISBN | 9789381319604 |
கனிவு, எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு முதலில் 1992-ல் வெளிவந்தது. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குங்குமம், குமுதம், இந்தியா டுடே, சுபமங்களா மற்றும் காலச்சுவடு இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான கனிவு என்பதே இப்புத்தகத்தின் பெயராகவும் அமைந்துள்ளது.
இத்தொகுப்பைப் பற்றி,
எதிலிருந்தும் விலகிவிட முடியும் என்று தோன்றவில்லை. நெருங்கிவிடவும் கூடவில்லை என்பதுதான் துயரமான இன்னொரு நிஜம். அப்படியொருவித நிஜத்துடன் கூடிய சிறுகதைகள் இவை.
என வண்ணதாசன் கூறியுள்ளார்.
சிறுகதைகள்
[தொகு]இப்புத்தகத்தில்
- பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்
- நீச்சல்
- விளிம்பில் நிற்கிறவர்கள்
- நிழல் குதிரை
- வேரில் பழுத்து
- சூரியன் அருகில் பறக்கிறவர்கள்
- சிறகுகள் விலாப்புறத்திலிருந்து முளைக்கின்றன
- சொன்னவிதமும் கேட்டவிதமும்
- ஆலங்கட்டிமழை
- ஒரு வாதாம் இலை ஒரு நீலச் சிறகு
- சிநேகிதியும் சிநேகிதர்களும்
- ஆறு
- கனிவு
- மழை வெயில்
- குளிப்பதற்கு முந்திய ஆறு
- காட்டு எருமைகள், வீட்டுப் பசுக்கள்
ஆகிய சிறுகதைகள் உள்ளன.