உள்ளடக்கத்துக்குச் செல்

கனிகா கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனிகா கபூர்
2016இல் கனிகா கபூர்
பிறப்பு21 ஆகத்து 1978 (1978-08-21) (அகவை 46)
இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள்பாட்காண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2012 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ராஜ் சந்தோக்
(தி. 1997; div. 2012)
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்
  • டீ. சீரிஸ்
  • ஜீ மியூசிக் கம்பெனி
இணைந்த செயற்பாடுகள்

கனிகா கபூர் (Kanika Kapoor) 1978 ஆகஸ்ட் 21 அன்று பிறந்துள்ள இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். அவரது வெற்றிகரமான பாடல் வாழ்க்கை மூலம் ஒரு முறை பிலிம்பேர் விருது பெற்றார். இலக்னோவில் கபூர் பிறந்து வளர்ந்தார், எப்போதும் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவர், ஆனால் அவர் 1997 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் சந்தோக்கை திருமணம் செய்து கொண்டு இலண்டன் சென்றார், அங்கு அவர் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்.

2012 ல் ராஜுவுடன் விவாகரத்து பெற்ற பிறகு, அவர் மீண்டும் மும்பை வந்து பாடகியாக மாறினார். ஒரு பாடகியாக, கபூரின் முதல் பாடல் "ஜுக்னி ஜி" (2012) என்ற இசை காணொளி ஒரு பெரிய வணிக வெற்றியாக மாறியது . 2014 ஆம் ஆண்டில் "ராகினி எம்.எம்.எஸ் 2" படத்திற்காக பேபி டால் என்ற பாடல் இந்தி பாடலை பாடியுள்ளார். அதன் வெளியீட்டில், "பேபி டால்" ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று முதலிடம் பிடித்தது, கபூர் பரபரப்பான ஒரு பாராட்டைப் பெற்றார் மற்றும் அவரது பாடும் பாணியில் புகழ்பெற்றார், இதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

கபூர் தொடர்ந்து இந்தி சினிமாவின் சிறந்த பாடல்களைப் பாடுவதற்கான பரவலான அங்கீகாரத்தையும் வெற்றியையும் பெற்றார், "ஹாப்பி நியூ இயர்" (2014), படத்தின் "லவ்லி" மற்றும் "காம்லீ" என்ற பாடல்கள் , "ராய்" (2015) படத்தில் "சிட்டியான் காலையான்", "ஏக் பெஹ்லி லீலா" படத்தில் "தேசி லுக்" (2015) போன்ற புகழ் பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கபூர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இலக்னோ நகரில் 1978 ஆகஸ்ட் 21 அன்று பிறந்துள்ளார். இவரது தந்தை ராஜீவ் கபூர் ஒரு ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் சோனம் கபூர் ஒரு "பூட்டிக்" உரிமையாளர்.[1] இவர் உத்தரப் பிரதேசத்தின் இலக்னோவில் கத்ரி குடும்பத்தில் பிறந்துள்ளார்.[2] இலக்னோவில் அவர் இசை பயின்றார்[3][4] தனது 12 வயதில், கபூர் , வாரனாசியைச் சேர்ந்த இசைக் கலைஞரான பண்டிட் கணேஷ் பிரசாத் மிஸ்ராவின் பாடலின் கீழ் பாரம்பரிய இசையைப் படிக்கத் தொடங்கினார், மேலும் அவர் இந்தியா முழுவதும் நடத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து பாடி வந்தார். கபூர் தனது குழந்தை பருவத்தில் பல இசை போட்டிகளில் பங்கு பெற்றார். 15 வயதில், அனைத்திந்திய வானொலியின் இசைத்தொகுப்பாளராகவும், பாடகர் அனூப் ஜலோட்டா பஜனைகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். லக்னோ, பாட்காண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட் மூலம் இவர் இளங்கலைப் பட்டம் மற்றும் இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பின்னர் அவர் தனது இசை வாழ்க்கையைத் தொடர மும்பை சென்றார்.[5]

வெளிநாடு வாழ் தொழிலதிபரான ராஜ் சந்தோக்கை 1997இல் திருமணம் செய்து கொண்டு அவரது கணவருடன் இலண்டன் மாநகரம் சென்றார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். கபூர் 2012 ல் தனது கணவரைப் பிரிந்து, லக்னோ திரும்பி தனது பெற்றோருடன் இணைந்தார்.[6][7][8] இவர்கள் 2012இல் விவாகரத்துப் பெற்றனர்.[2][9]

தொழில்

[தொகு]
கபூர் ஹிந்துஸ்தான் டைம்ஸின் மிக நாகரீகமான பெண் விருது நிகழ்ச்சியில் (2016)

2012 இல் கபூர் டாக்டர் ஜீயஸைக் கொண்ட "ஜூகினி ஜி" இசை கானொளியை வெளியிட்டார் "ஜூகினி ஜி" 2012 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தனிப்பாடல்களில் ஒன்றாக ஆனது. மேலும், சிறந்த தனிப்பாடலுக்கான "கிளாசிக் பிரிட்" அமைப்பின் "ஆசியா டிவி மியூசிக் விருது" பெற்றது.[10]

"ஸ்லாம் த டூர்" நிகழ்ச்சியில் கபூர்

அதே ஆண்டில், "ஸ்லாம் த டூர்" என்ற தலைப்பில் சாருக் கான் மற்றும் தீபிகா படுகோண் ஆகியோருடன் வட அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[11]

குறிப்புகள்

[தொகு]
  1. "Kanika Kapoor Wiki, Age, Caste, Husband, Family: Biography". celenote.com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2020.
  2. 2.0 2.1 "Kanika Kapoor: I am just a simple small town girl who has been through a lot". The Times of India. Archived from the original on 18 November 2015. I am a Khatri, who was born and brought up in Lucknow ... I got married to Raj and moved to London when I was only 17 ... we separated about five years ago and finally divorced three years back ... This was January 2012 ... By July, Raj and I had separated and in October, I won the best British Asian award.
  3. Sunayana Suresh (18 March 2014). "I had no idea who Sunny Leone was: Baby Doll singer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 13 October 2014. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "'I love Chandigarh, sarson ka saag ... '". The Tribune. 20 June 2016.
  5. R.M. Vijayakar (12 May 2015). "I Am Living My Ambitions and Dreams, Says Kanika Kapoor". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/I-Am-Living-My-Ambitions-and-Dreams-Says-Kanika-Kapoor/2015/05/12/article2810357.ece. பார்த்த நாள்: 12 May 2015. 
  6. Elina Priyadarshini Padhiary (18 November 2014). "Im not here jut to sing for Bollywood: Kanika Kapoor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "PHOTOS: 18 की उम्र में हुई थी सिंगर कनिका कपूर की शादी, 3 बच्चों की हैं मां". NDTV India. 18 June 2016.
  8. Devanshi Seth (15 May 2014). "I had to deal with a lot of vicious rumours: Kanika Kapoor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  9. Roy, Saumya (30 January 2016). "Smaal talk: The siren's call". Mumbai Mirror. பார்க்கப்பட்ட நாள் 29 February 2016.
  10. Sneha K. Sukumar (13 September 2014). "Meet the multi-talented, Kanika Kapoor". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 21 December 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  11. "SRK, Madhuri, Deepika Sizzle in the New Promo of SLAM-The Tour". Koimoi. 1 September 2014. பார்க்கப்பட்ட நாள் 21 December 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கனிகா கபூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிகா_கபூர்&oldid=3586545" இலிருந்து மீள்விக்கப்பட்டது