கனரா
கனரா
கராவலி | |
|---|---|
கருநாடகாவின் முழு கடற்கரையையும் ஆக்கிரமித்துள்ள கனரா (ஆரஞ்சு நிறத்தில்) | |
| நாடு | |
| மாநிலம் | |
| பெரிய நகரம் | மங்களூர் |
| தலைமையகம் | தென் கன்னடம்: கார்வார் வட கன்னடம்: மங்களூர் |
| வட்டம் | தென் கன்னடம்: கார்வார், அன்கோலா, கும்டா, ஹொன்னாவரா, பத்கல், சிர்சி, சித்தபூர், எல்லாபூர், முங்கோடு, அலியால், ஜொய்தா, தன்டேலி
உடுப்பி: உடுப்பி, கர்கலா, குந்தாபுரம், பைந்தூர், பிரம்மாவர், கபு, எப்ரி தென் கன்னடம்: மங்களூர், மூதபித்ரி, பந்த்வால், பெள்தங்கடி, சுல்லியா, புத்தூர், கடபா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 18,730 km2 (7,230 sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| கடற்கரை | 320 km (200 mi) |
| பாலின விகிதம் | 1,040 ♂/♀ |
| கல்வியறிவு | |
கனரா அல்லது கராவலி (Kanara or Karāvali) என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தென்மேற்கு கொங்கண் கடற்கரையில், இன்றைய இந்திய மாநிலமான கருநாடகாவின் அரபிக்கடலுடன் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாகும்.[1] வடகன்னட மாவட்டம், உடுப்பி, தென் கன்னட மாவட்டம் ஆகியவற்றை இது உள்ளடக்கியது.[2] மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்கு முன்பு காசர்கோடு இதனுடன் சேர்க்கப்பட்டது.
பெயர்க்காரணம்
[தொகு]வரலாற்றாசிரியர் செவேரினோ டா சில்வாவின் கூற்றுப்படி, இப்பகுதியின் பண்டைய பெயர் பரசுராம சிருஷ்டி (பரசுராமரால் உருவாக்கப்பட்டது) என இருந்தது.[3] இவரும், இசுடீவன் புக்ஸ் என்ற இருவரின் கருத்துப்படி, பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வர்த்தகத்திற்காக இப்பகுதிக்கு வருகை தந்த போத்துக்கீசர், இடச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இதனை கனரா என்றழைத்தனர். அந்த நேரத்தில் இந்த பகுதி இருந்த கேளடி நாயக்கர்கள், கன்னட வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதினர். கடற்கரை என்பதை 'கராவலி' என கன்னட மக்கள் குறிப்பிடுகின்றனர்.[4] ஐரோப்பியர்களால் இந்த மாவட்டத்திற்கு 'கனரா' என்று பெயரிடப்பட்டது. 1799-இல் பிரித்தானியர்கள் இந்த மாவட்டத்தை ஆக்கிரமித்த பிறகு இந்த பெயரைத் தக்க வைத்துக் கொண்டனர். அன்றிலிருந்து இன்றும் தொடர்ந்து வருகிறது.[4]
வரலாறு
[தொகு]பழங்காலத்திலிருந்தே, கனரா கடற்கரையின் பெரும்பகுதி கலாச்சார ரீதியாக துளு நாடு என்று அழைக்கப்படுகிறது.[5] வரலாற்று ரீதியாக, வடக்கில் கங்கவள்ளி ஆற்றுக்கும் தெற்கில் பயசுவினி ஆற்றுக்கும் இடையில் துளு நாடு அமைந்துள்ளது.[6] தற்போது, கருநாடகாவின் உடுப்பி மற்றும் தெற்கு கன்னட மாவட்டங்களையும், கேரளாவின் மஞ்சேசுவரம் வட்டத்தையும் துளு நாடு கொண்டுள்ளது.[7] பொதுவாக வடகன்னட மாவட்டம் கொங்கண் கடற்கரையின் தெற்குப் பகுதியாக கருதப்படுகிறது.[8] குறிப்பாக, கங்கவள்ளி ஆற்றின் வடக்கே உள்ள கடலோரப் பகுதி பாரம்பரியமாக கொங்கண் பகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[9]
போர்த்துகீசர்கள் 1498-1763-இலிருந்து கனராவை ஆக்கிரமித்தனர். இந்தக் காலகட்டத்தில், வடக்கில் கார்வாரில் பாயும் காளி ஆற்றின் தெற்குக் கரையிலிருந்து தெற்கில் காசர்கோட்டில் பாயும் பயசுவினி ஆற்றின் வடக்குக் கரைகள் வரை கனராவின் புவியியல் பரப்பு விரிவடைந்தது.[10]
1799-இல் நான்காவது மைசூர் போர் முடிவடைந்த பிறகு, ஆங்கிலேயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றி சென்னை மாகாணத்தின் கனரா மாவட்டத்தை நிறுவினர். இந்த மாவட்டம் 1859-ஆம் ஆண்டில் வடக்கு மற்றும் தென் கன்னட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.[11] வடக்கு கனரா மாவட்டம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் தென் கனரா மாவட்டம் சென்னை மாகாணத்தின் அதிகார வரம்பிற்குள் இருந்தது. தெற்கு கனரா சமகால உடுப்பி, தெற்கு கன்னடா மற்றும் காசர்கோடு மாவட்டங்களின் பிரிக்கப்படாத பிரதேசத்தை உள்ளடக்கியது.[11]
1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பம்பாய் மாகாணம் பம்பாய் மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டு மாநில மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து, பம்பாய் மாநிலத்தின் தெற்குப் பகுதி மைசூர் மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது. இது 1972-இல் கருநாடகம் என்று மறுபெயரிடப்பட்டது. காசர்கோடு கேரளாவுடன் சேர்க்கப்பட்டது.[12] அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் தெற்கு கனரா முறையே தென் கன்னடா மற்றும் வட கன்னடா என்று மறுபெயரிடப்பட்டன. 1997-ஆம் ஆண்டில், உடுப்பி மாவட்டம் தென் கன்னட மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[12]
புவியியல்
[தொகு]கனரா பிராந்தியம் இந்திய தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கருநாடகக் கடற்கரையை உருவாக்குகிறது.[13] கடலோர கருநாடகம் மலபார் கடற்கரையின் வடக்குப் பகுதியை உருவாக்குகிறது.[14] கனரா சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் (4,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[15] இதன் வடக்கில் கொங்கண், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், தெற்கில் கேரள சமவெளிகள் மற்றும் மேற்கில் அரபிக் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[16] இது வடக்கிலிருந்து தெற்கே சுமார் 225 கிலோமீட்டர் (140 மைல்) நீளம் கொண்டது. தெற்கில் அதிகபட்ச அகலம் சுமார் 64 கிலோமீட்டர் (40 மைல்) ஆகும்.[17]
நிர்வாகம்
[தொகு]சமகால கனரா வடக்கில் மஜாலி கிராமத்திலிருந்து தெற்கில் தலபாடி கிராமம் வரை நீண்டுள்ளது.[18] இப்பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களான தென் கன்னடா, உடுப்பி மற்றும் வட கன்னடா முறையே கார்வார், உடுப்பி மற்றும் மங்களூரில் தங்கள் தலைநகரங்களைக் கொண்டுள்ளன.[19]
மக்கள்தொகை
[தொகு]கனரா பிராந்தியத்தில் தென் கன்னடா, உடுப்பி மற்றும் வட கன்னடா ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 47,04,179 ஆகும்.
மொழிகள்
[தொகு]கன்னடம், கொங்கணி மற்றும் துளு ஆகிய மொழிகள் கனரா பிராந்தியத்துடன் நெருக்கமாக தொடர்புடைய முக்கிய மொழிகளாகும்.
இதனையும் காண்க
[தொகு]- அஞ்செடிவா கோட்டை
- கொங்கண் மண்டலம்
- தென் கன்னட மாவட்டம் (முந்தைய மாவட்டம்)
- துளு நாடு
- ஒசுதுர்க் கோட்டை
மேற்கோள்கள்
[தொகு]- ↑
Arnold, Alison, ed. (2017). "Coastal Karnataka". The Garland Encyclopedia of World Music: South Asia: The Indian Subcontinent. Garland Encyclopedia of World Music. Routledge. ISBN 9781351544382.
Coastal Karnataka, formerly called the Canara Coast, is the part of Indias southwestern coastline north of Kerala and south of Goa. [sic]
- ↑
K., Prakashnarayana (2018). "Geography of Karnataka". Know Our Karnataka: A book for Competitive Exams. pp. 27–36.
Popularly known as Canara region or Karavali...
- ↑ Silva 1958
- ↑ 4.0 4.1 Silva & Fuchs 1965
- ↑ "This city has six names in six languages, and the official one Mangaluru, is the least popular". தி நியூஸ் மினிட். 6 November 2014 இம் மூலத்தில் இருந்து 8 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190408184930/https://www.thenewsminute.com/karnatakas/326.
- ↑ Bhatt, P. Gururaja (1969). Antiquities of South Kanara. Prabhakara Press. p. 2.
- ↑ "Tulu Nadu Region". keralatourism.org. கேரள அரசு. Retrieved 15 September 2018.
- ↑ Charlesworth, Neil (2001). Peasants and Imperial Rule: Agriculture and Agrarian Society in the Bombay Presidency 1850–1935. Cambridge South Asian Studies. Vol. 32 (revised ed.). CUP. p. 60. ISBN 9780521526401.
- ↑ Memorandum on Maharashtra-Mysore border dispute to the Commission on Maharashtra-Mysore-Kerala boundary disputes. 1967. மகாராஷ்டிர அரசு. p. 59.
- ↑ Shastry, Bhagamandala Seetharama (2000). Borges, Charles J. (ed.). Goa-Kanara Portuguese Relations, 1498–1763. XCHR studies series. Vol. 8. Concept Publishing Company. ISBN 9788170228486.
- ↑ 11.0 11.1 "Chapter 3 – Profile of the Study Area: Coastal Karnataka" (PDF). Shodhganga. Retrieved 15 September 2019.
- ↑ 12.0 12.1 Bhat, N. Shyam (1998). South Kanara, 1799–1860: A Study in Colonial Administration and Regional Response. Mittal Publications. ISBN 9788170995869.
- ↑ "India: Coastal areas".. Encyclopædia Britannica, Inc..
- ↑ "Malabar Coast".. Encyclopædia Britannica, Inc..
- ↑ "Kanara".. Encyclopædia Britannica, Inc..
- ↑ "Karnataka Coast".. Encyclopædia Britannica, Inc..
- ↑ Ghori, G.K. "Karnataka".. Encyclopædia Britannica, Inc..
- ↑ Shastry, Bhagamandala Seetharama (2000). Borges, Charles J. (ed.). Goa-Kanara Portuguese Relations, 1498–1763. XCHR studies series. Vol. 8. Concept Publishing Company. ISBN 9788170228486.Shastry, Bhagamandala Seetharama (2000). Borges, Charles J. (ed.). Goa-Kanara Portuguese Relations, 1498–1763. XCHR studies series. Vol. 8. Concept Publishing Company. ISBN 9788170228486.
- ↑
"Profile of Coastal Karnataka". Coastal Karnataka Calling!!! Tourism and the Coastal Investors Meet – December 2003. 2003. pp. 2–4.
Coastal Karnataka consists of three districts - Uttara Kannada, Udupi and Dakshina Kannada. [sic]
குறிப்புகள்
[தொகு]- Silva, Severine; Fuchs, Stephen (1965). The Marriage Customs of the Christians in South Canara. 2. Vol. 24. Asian Folklore Studies, Nanzan University, Japan.
- Silva, Severine (1961). History of Christianity in Canara. Vol. I. Coompta, North Canara: Star of Kanara Press.
மேலும் வாசிக்க
[தொகு]- Michell, George, ed. (2012). Kanara, a Land Apart: The Artistic Heritage of Coastal Karnataka (Illustrated ed.). Marg Foundation. ISBN 9788192110639.