கனநீர் ஆலை, ஹஜீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் கனநீர் வாரியம் இரண்டாவதாக குஜராத் மாநிலத்தில் ஹஜீராவில் கனநீர் ஆலையை அமைத்தது.[1] இதன் செய்முறை செறிவூட்டிய டியூட்டிரியம் தனிமம் கலந்த அம்மோனியாவிலிருந்து அதனை பிரித்தடுக்கும் முறையை சார்ந்ததாகும்.

ஹஜீராவில் செயல்படும் கனநீர் ஆலை பரோடா ஆலையில் முதன் முதலில் பயன்படுத்திய செய்முறையைத் தழுவி இருந்தாலும், இதில் வெளிநாட்டினரின் தொழில் நுட்பப் பங்கேற்பு இல்லாததாகும். சூரத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் ஹஜீராவின் ஆலை அமைந்துள்ளது. இத்திட்டம் 1986 ஆம் ஆண்டில் துவங்கியது. 1991 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் முதல் கனநீர் தயாரித்து வழங்கி வருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ http://heavywaterboard.org/htmldocs/general/about.asp பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
  2. ^ http://www.heavywaterboard.org/htmldocs/plants/Hazira.asp பரணிடப்பட்டது 2009-06-08 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனநீர்_ஆலை,_ஹஜீரா&oldid=3534800" இருந்து மீள்விக்கப்பட்டது