கனநீர் ஆலை, தூத்துக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூத்துக்குடியில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று.[1] தூத்துக்குடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த இந்த கனநீர் ஆலை பரோடாவில் உள்ளது போலவே அம்மோனியா-ஐதரசன் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை வெப்பப் பதனிடும் செய்முறையில் செயல்படும் இரண்டாவது ஆலையாகும். [2] இவ்வாலையின் திட்டப்பணிகள் 1971 - ஆம் ஆண்டில் துவங்கின. 1978 ஆம் ஆண்டு முதல் இங்கு கனநீர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த கனநீர் ஆலை கட்டுவதற்கான முதலீடு ரூபாய் 3741 இலட்சம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ http://heavywaterboard.org/htmldocs/general/about.asp பரணிடப்பட்டது 2012-02-25 at the வந்தவழி இயந்திரம்
  2. ^ http://www.heavywaterboard.org/htmldocs/plants/Tuticorin.asp பரணிடப்பட்டது 2011-03-02 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனநீர்_ஆலை,_தூத்துக்குடி&oldid=3534803" இலிருந்து மீள்விக்கப்பட்டது